akshaya tritiya 2022 : தங்கம் விலை அதிகரித்தபோதிலும் அட்சய திரிதியை நாளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வமாக இருந்தார்கள். பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைப் பார்க்கிறார்கள் என்று தங்கம் மற்றும் வைர நகைகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் ஜிலானி தெரிவித்தார்

தங்கம் விலை அதிகரித்தபோதிலும் அட்சய திரிதியை நாளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வமாக இருந்தார்கள். பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைப் பார்க்கிறார்கள் என்று தங்கம் மற்றும் வைர நகைகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் ஜெலானி தெரிவித்தார்

அட்சய திரிதியை நாளான நேற்று எந்த நல்ல செயல்கள் செய்தாலும், பொருட்கள் வாங்கினாலும் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் மக்கள் செல்வத்தின் உச்சமான தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரியை நாளில் மக்கள் தங்க நகைகள் வாங்க கூட்டம் கூட்டமாக நகைக்கடைக்கு படையெடுப்பார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அட்சயதிரியை நாளில் விறுவிறுப்பு இல்லை.

ஆனால், அட்சய திரியை நாளில் நேற்று மக்கள் கடந்த 2019ம் ஆண்டைப் போல் ஆர்வத்துடன் நகைக் கடைகளுக்கு அதிகாலை முதலே நகைகள் வாங்க ஆர்வத்துடன் குவிந்தனர். அட்சய திருதியை முன்னிட்டு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள நகைக்கடைகள் அதிகாலையே திறக்கப்பட்டு , இரவு 2 மணிவரை கடைகள் திறந்திருந்தன.

மக்கள் தங்க நகைகள் மட்டுமல்லாது வெள்ளிப் பொருட்கள் கூட்டம்கூட்டமாக குடும்பத்தினருடன் வந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். தங்கம் நகைகள், வெள்ளிப்பொருட்களை வாங்கவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி, பரிசுகள், பரிசுப்கூப்பன்களை பல்வேறு நகைக்கடைகள் வழங்கின. 

அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் விற்பனை குறித்து தங்கம் மற்றும் வைர நகைகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் ஜிலானி ஏசியாநெட் நியூஸ் தமிழ்- இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, அட்சயதிருதியை நாளில் மக்கள் தங்கம் வாங்க அதிகமான அளவில் வரவில்லை. தங்கம் வாங்க ஆசை இருந்தும், கொரோனா அச்சத்தால் வரவில்லை. ஆனால், 2019ம் ஆண்டுக்குப்பின் மக்கள், நேற்றைய அட்சய திருதியை நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாகவந்து நகைகள் வாங்கியது மகிழ்ச்சிக்குரியது. கடந்த2019ம் ஆண்டைவிட 2022ம் ஆண்டு அட்சய திருதியை நாளில் நகைகள் விற்பனை அதிகமாக இருந்தது.

கடந்த ஆண்டு அட்சயதிருதியை நாளில் இருந்த தங்கத்தின் விலையைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தங்கம் பவுனுக்கு ரூ2ஆயிரத்து 424 அதிகம், கிராமுக்கு ரூ.303 அதிகம். இருப்பினும் மக்கள் தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். மக்கள் தங்கள் சேமிப்பை பாதுகாப்பான முதலீட்டில் சேர்க்க விரும்புகிறார்கள், அதற்கு தங்கம் சிறந்தது என்பதால் அதை வாங்க ஆர்வம் காட்டினர்.

அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைக் கடைகள் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை திறந்திருந்தன. மக்கள் ஆர்வத்துடன் வந்து நகைகள் வாங்கிச்சென்றனர். எதிர்பார்த்தைவிட விற்பனை சிறப்பாக இருந்தது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதல் நகைகள்விற்பனை இருந்தது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் எத்தனை கிலோ தங்க நகைகள்விற்பனையானது என்று துல்லியமாகக் கூற இயலாது. ஆனால், ஏறக்குறைய 18 டன் நகைகள் விற்பனையாகியிருக்கலாம். இது தோரயமான மதிப்புதான் இதுதான் உறுதியான எடை அல்ல” எனத் தெரிவித்தார்