இந்தியாவின் சிறந்த மொபைல் நெட்வொர்க் சேவைக்கான 4 விருதுகளை தொடர்ந்து 2வது முறையாக வென்ற ஏர்டெல்
இந்தியாவின் சிறந்த மற்றும் அதிவேக நெட்வொர்க் சேவையை வழங்கும் நெட்வொர்க் என்ற பெருமையையும் அதற்கான அங்கீகாரத்தையும் ஏர்டெல் பெற்றிருப்பதுடன், தொடர்ச்சியாக 2வது முறையாக சிறந்த நெட்வொர்க்குக்கான 4 விருதுகளை பெற்றுள்ளது.
இந்தியாவின் சுமார் 697 மில்லியன் இண்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர். அவர்களில் 448 மில்லியன் பேர் ஸ்மார்ட்ஃபோன்களில் இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள். 2019 நிலவரப்படி, மொபைல் டேட்டா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 420 மில்லியனாக இருந்தது. ஓராண்டில் இந்த எண்ணிக்கை 7% உயர்ந்திருக்கிறது. இண்டர்நெட் பயனாளர்கள் மற்றும் மொபைல் இண்டர்நெட் பயனாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துவருகிறது. இது, இந்தியாவில் மொபைல் ஃபோன் மற்றும் டெலிகாம் சேவைகளுக்கான சந்தையில் எந்தளவிற்கு இடமும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மேற்கூறிய இண்டர்நெட் பயனாளர்களின் எண்ணிக்கையிலிருந்தே, டெலிகாம் நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் கடும் போட்டி போடுகின்றன என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதனால் தான், டெலிகாம் நிறுவனங்கள் பயனாளர்களை கவர ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துவருகின்றன. ஆனால் எந்த டெலிகாம் நிறுவனம் சிறந்த சேவையை வழங்குகிறது எப்படி தெரிந்துகொள்ள முடியும்? அதை அறிவதற்காகத்தான் ”Independent Global Standard" குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக பல்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் பயனாளர்களின் கருத்தை கேட்டறிந்து பகுப்பாய்வு செய்து ரிப்போர்ட் செய்கிறது. வீடியோ ஸ்ட்ரீமிங் தரம், 4ஜி கவரேஜ், கேம் அனுபவம், பதிவிறக்கம் செய்யும் அனுபவம் ஆகியவற்றை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எந்த நெட்வொர்க் சிறந்தது என்று தெரிவிக்கிறது.
2020 செப்டம்பர் மாதத்திற்கான ஆய்வில், வீடியோ அனுபவம், கேம் அனுபவம், வாய்ஸ் ஆப் அனுபவம் மற்றும் பதிவிறக்க வேகம் என 7ல் 4 விஷயங்களில் மீண்டும் ஏர்டெல் தான் வெற்றியாளர்.
வீடியோ அனுபவம்:
2020ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவில் இண்டர்நெட்டில் வீடியோ பார்த்தவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பயனாளர்கள் அதிகமாக வீடியோ பார்க்கின்றனர். இதை கருத்தில்கொண்டு பயனாளர்களுக்கு அதிவேக நெட்வொர்க் சேவையை வழங்கிவரும் ஏர்டெல், சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும் நெட்வொர்க் என்ற பெருமையை தொடர்ச்சியாக 4வது முறையாக பெறுகிறது. ஏர்டெல் வீடியோ அனுபவ விருதில், முன்பை விட 6.3% அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறது ஏர்டெல்.
கேம்ஸ் அனுபவம்:
சமீபகாலங்களில் ஆன்லைனில் கேம் ஆடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. கேம் அப்ளிகேஷன்களில் அல்லது மொபைல் ப்ரௌசர்களின் மூலம் கேம் என எந்தவகையிலோ, ஆகமொத்தத்தில் ஆன்லைன் கேம் இண்டர்ஸ்ட்ரி பில்லியன் டாலர் சந்தையாக உருவெடுத்திருக்கிறது. 2020 இறுதியில் மொபைல் ஃபோன்களில் ஆன்லைன் கேம் ஆடியவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 628 மில்லியனாக இருக்கும் என ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கிறது. எனவே கேம் ஆடுபவர்களுக்கு நல்ல கேம் அனுபவத்தை வழங்கும் விதமாக சிறந்த நெட்வொர்க் சேவையை வழங்குவது நெட்வொர்க் நிறுவனங்களின் கடமையாகிறது. அந்தவகையில் 2020, செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக ஓபன் சிக்னல், கேம் தொடர்பான பல்வேறு விஷயங்களை கருத்தில்கொண்டு எந்த நெட்வொர்க் நிறுவனம் சிறந்த கேம் அனுபவத்தை வழங்குகிறது என்று நடத்திய ஆய்வில் 100க்கு 55.6 மதிப்பெண்களுடன் ஏர்டெல் வெற்றியாளராக வாகைசூடுகிறது.
வாய்ஸ் ஆப் அனுபவம்:
ஃபேஸ்புக், மெசெஞ்சர், வாட்ஸ் ஆப், ஸ்கைப் ஆகிய ஆப்களில் கால் செய்து பேசுபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகிறது ஏர்டெல். ஏர்டெல் பயனாளர்கள் இதுபோன்ற வாய்ஸ் ஆப்களில் பேசும்போது, சிறந்த அனுபவத்தை பெறுகிறார்கள். எனவே வாய்ஸ் ஆப் அனுபவத்தில் 100க்கு 75.5 என டாப் ஸ்கோர் செய்து தொடர்ச்சியாக 2வது முறை, சிறந்த வாய்ஸ் ஆப் அனுபவத்திற்கான சேவையை வழங்கிய விருதை பெறுகிறது ஏர்டெல்.
பதிவிறக்க வேக அனுபவம்:
பயனாளர்கள் மொபைல் அல்லது கணினி மூலமாக என எதில் பதிவிறக்கம் செய்தாலும், எந்த சிக்கலும் இல்லாமல், அதிவேக பதிவிறக்க அனுபவத்தை வழங்குவதில் தொடர்ச்சியாக ஆறாவது முறை வெற்றி பெற்றுள்ளது ஏர்டெல். ஏர்டெல் பயனாளர்கள் 10.4 Mbps என்ற வேகத்தில் பதிவிறக்கம் செய்கிறார்கள்.
சிறந்த நெட்வொர்க்குக்கான சேவையில், தொடர்ச்சியாக 2வது முறையாக, 7ல் 4 விருதுகளை ஏர்டெல் வென்றுள்ளது. 2020ன் தொடக்கத்திலிருந்து ஏர்டெல் ஒரு மிகப்பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது, பயனாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிப்பதுடன், அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவைத்து, பயனாளர்களின் புகாரே இல்லை என்ற சூழலை எட்டுவதுதான் ஏர்டெல்லின் நோக்கம். சமீபத்திய ஓபன் சிக்னல் ரிப்போர்ட், ஏர்டெல் பயனாளர்களின் புகார்களை கவனித்து அவர்களின் சிக்கல்கக்ளை தீர்த்துவைத்து, மிகச்சிறந்த நெட்வொர்க் சேவையை வழங்கிவருகிறது என்பதை உணர்த்துகிறது.