Asianet News TamilAsianet News Tamil

ஏர்டெல் நெட்வொர்க்கின் அபார சாதனை..! அந்தமான் நிகோபார் தீவுகளில் அதிவேக 4ஜி இன்டர்நெட் சேவை

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதிலளிப்பது மற்றும் குறைகளை கேட்டறிந்து களைவதாக கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக உள்ளதுடன் அந்தமான் நிகோபரில் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்குகிறது.
 

airtel brings ultra fast 4g internet service to andaman nicobar islands
Author
Chennai, First Published Aug 24, 2020, 10:27 AM IST

இன்டர்நெட் மக்களின் வாழ்க்கை தரம் உயர உதவுகிறது என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகையாகாது. பொழுதுபோக்கு முதல் வேலை, கல்வி, வங்கிகள் என அனைத்து செயல்பாடுகளையும் இன்டர்நெட் எளிதாக்குகிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், இன்டர்நெட் 2020ல் மிக முக்கியமான தொலைத்தொடர்பு கருவியாக பயன்படுகிறது.

ஏர்டெல் 2014ம் ஆண்டு 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியதிலிருந்து, அது நமது வாழ்வின் பிரிக்க முடியாத முக்கிய அங்கமாகிவிட்டது. 4ஜி இன்டர்நெட் இல்லாத ஒரு நாளைக்கூட நம்மால் கற்பனை செய்யமுடியாது. ஆனால் அந்தமான் நிகோபரில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் இந்திய நிலப்பரப்பிலிருந்து நீண்ட தொலைவில் அமைந்திருக்கும் யூனியன் பிரதேசம் அது. அதனால் அங்கு 4ஜி நெட்வொர்க் என்பது எட்டாக்கனியாக இருந்தது. VSAT டெக்னாலஜி மூலம் 4ஜி நெட்வொர்க் அங்கு செயல்படுத்தப்படுவதால், இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தது.

airtel brings ultra fast 4g internet service to andaman nicobar islands

ஆனால் அந்த நிலையை ஏர்டெல் மாற்றியமைத்துள்ளது. ஏர்டெல் அந்தமான் நிகோபாரில் அதிவேக 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்த சாதனையை முதல் நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றுள்ளது. சென்னை-அந்தமான் நிகோபார் இடையேயான நீர்மூழ்கி கேபிள் சிஸ்டம்(CANI-SMCP)-ஐ பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10ம் தேதி(ஆகஸ்ட்10) தொடங்கிவைத்தார். ரூ.1224 கோடி ரூபாய் செலவில் சென்னையிலிருந்து அந்தமான் நிகோபாருக்கு 2313 கிமீ தொலைவிற்கு கடலுக்கு அடியில் ஆப்டிகல் ஃபைபர் கேபிளின் மூலம் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்கும் ப்ராஜக்ட். அந்தமான் நிகோபர் மட்டுமல்லாது, ஸ்வராஜ் தீப், லாங் ஐலேண்ட், ரங்காத், லிட்டில் அந்தமான், கமோர்டா, கார் நிகோபார் மற்றும் கிரேட்டர் நிகோபார் ஆகிய 7 தீவுகளை, ஏர்டெல்லின் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைக்கிறது.

airtel brings ultra fast 4g internet service to andaman nicobar islands

பல்லாண்டுகளாக அந்தமான் நிகோபாரை தவிர, இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் அனுபவித்து வந்த, அதிவேக 4ஜி சேவையை அந்தமான் நிகோபாருக்கும் வழங்கியுள்ளது ஏர்டெல். இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருப்பவர் வரை அனைவருக்கும் 4ஜி அதிவேக நெட்வொர்க்கை வழங்குவதுதான் ஏர்டெல்லின் லட்சியம். அதைநோக்கி ஏர்டெல் அபாரமான பணியை செய்துவருகிறது. அதிவேக இன்டர்நெட் சேவை மட்டுமல்லாது, டெலிமருந்துகள், இணைய வங்கி சேவை, ஆன்லைன் கற்றல் என பல சேவைகளை வழங்குவதால், தீவுகளில் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது. அதனால் இப்போதெல்லாம் தீவுகளின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது. அந்தமான் நிகோபாரில் வசிக்கும் மக்களும் அதிவேக இண்டர்நெட் சேவையின் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதால், மக்களும் பொருளாதார ரீதியில் மேம்படுகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நெட்வொர்க் சேவையை கொண்டு சேர்த்ததன் அடிப்படையில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரந்த நெட்வொர்க் சேவையை வழங்கும் நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது.

ஏர்டெல் அதிவேக 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்கியதன் மூலமாக, அந்தமான் நிகோபார் தீவுகள் டிஜிட்டல் புரட்சியில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios