airbus flight: சமையல் எண்ணெய் எரிபொருளில் பறந்த ஏர்பஸ் விமானம்: 3 மணிநேரப் பயணத்துக்குப்பின் தரையிறக்கம்
airbus flight: சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் நோக்கில் சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட கலவை எரிபொருளில் ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் நோக்கில் சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட கலவை எரிபொருளில் ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
ஜூரோ-இ
வானில் 3 மணிநேரப் பயணத்துக்குப்பின் வெற்றிகரமாக தரையிறங்கியது. பரிசோதனைக்காகவடிவமைக்கப்பட்ட இந்த விமானத்துக்கு ஜூரோ-இ டெமான்ஸ்ட்ரேட்டர் என்று ஏர்பஸ் நிறுவனம் பெயரிட்டிருந்தது.
3 மணிநேரப் பயணம்
கடந்த மாதம் 25ம்தேதி ஏர்பஸ் விமானம் இந்த பரிசோதனையை பிரான்ஸின் டோலூஸ் நகரில் நிகழ்த்தியது. டோலூஸ் நகரில் உள்ள பிளாக்நாக் விமானநிலையத்திலிருந்து காலை 8.43 மணிக்குப் புறப்பட்ட ஜூரோ-இ விமானம், 3 மணிநேரப் பயணத்துக்குப்பின் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சிறப்பு எரிபொருள்
இந்த விமானம் இயங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட எரிபொருள் நார்மண்டி நகரில் உள்ள டோட்டல்எனர்ஜிஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஹைட்ரோபிராசஸ்டு எஸ்டர்ஸ்,கொழுப்பு அமிலங்கள் கொண்டு, சல்பர், எந்தவிதமான வாசனைதிரவியங்கள் இன்றி இந்த எரிபொருள் தயாரிக்கப்பட்டது.
ஏர்பஸ் சார்பில் 100 சதவீதம் எஸ்ஏஎப்எனப்படும் நிலைத்த விமானஎரிபொருள் மூலம் விமானங்கள் இயக்கப்படுவது இது 3-வது முறையாகும். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஏர்பஸ் விமானமும், 2021, அக்டோபர் மாதம் ஏ319ரக விமானத்தையும் சமையல் எண்ணெய் எரிபொருளில் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
2050ம் ஆண்டு இலக்கு
ஏர்பஸ் நிறுவனம் வெளியி்ட்ட அறிக்கையில் “ கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும் என்று ஏர்பஸ் நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. 2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை ஜீரோவாக்க வேண்டும். கார்பனைக் குறைப்பதில் சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்ட எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கும்.
தற்போது அனைத்து ஏர்பஸ் விமானங்களும், விமான எரிபொருளுடன் 50 சதவீதம மண்எண்ணெய் கலந்து இயக்க அனுமதிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்க கேடில்லாத எஸ்ஏஎப் எரிபொருள் மூலம் முழுமையாக இயக்கப்படும் என்று நம்புகிறேன்.
12 சதவீதம் கார்பன்
2019ம் ஆண்டு உலகளவில் 915 கார்பனை விமானங்கள் வெளியிட்டுள்ளன. போக்குவரத்து துறையில் வாகனங்கள் வெளியிடப்படும் கார்பன் 74 சதவீதம் என்றால் விமானங்கள் 12 சதவீதபங்களிப்பு செய்கின்றன. 2050ம் ஆண்டுக்குள் விமான போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் ஜூரோகார்பன் நிலையை உருவாக்க முயல்வோம். இது கடினமான இலக்குதான், சவாலானதுதான்” எனத் தெரிவித்துள்ளது.