கொரோனா பெருந்தொற்று காலத்தில், 2020-21ம் நிதியாண்டில் ஏர் இந்தியா, விமானப் போக்குவரத்து ஆணையம்(ஏஏஐ) ஆகியவற்றுக்கு ரூ.7,083 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரூ.7,083 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்புக் குறித்து தனியாகக் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
விமானப் போக்குவரத்து துறை சார்பில் கடன் பெற்றவர்களுக்கு, அவசரக் கால கடன் உறுதித் திட்டத்தின் கீழ் மத்தியஅரசு கடன் வழங்குகிறது என்று தேசிய கடன் உறுதி அறக்கட்டளை நிறுவனம் லிமிட் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவசரகால கடன் உறுதித்திட்டத்தையும் 2023 மார்ச் மாதம் வரை நீடித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பெருந்தொற்று காரணமாக சர்வதேச விமானச் சேவையை பிப்ரவரி 28ம் தேதிவரை இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையம் நிறுத்திவைத்துள்ளது. ஆனால், சரக்கு விமானங்களுக்கும், ஏர்-பபுள் முறையில் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது
இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்