Asianet News TamilAsianet News Tamil

'ஏர் இந்தியா'- பெயரை வைத்தது யார் தெரியுமா? டாடா வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்கள்

ஏர் இந்தியா என்ற பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது, எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்த சுவரஸ்யமானதகவல்களை டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Air India: A name chosen through opinion poll more than 75 years ago
Author
New Delhi, First Published Feb 7, 2022, 12:22 PM IST

ஏர் இந்தியா என்ற பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது, எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்த சுவரஸ்யமானதகவல்களை டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடனில் தத்தளித்து வந்தநிலையில் அதன்பங்குகளை விற்பனை செய்ய கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்றது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விலைக்கு கேட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Air India: A name chosen through opinion poll more than 75 years ago

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் முறைப்படி, டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஏற்கெனவே பரிமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27ம்தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

  1. 1932ம் ஆண்டு ரத்தன் ஜே ஆர்டி ரத்தன் டாட்டா நாட்டிலேயே முதல்முறையாக டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  2. 1946-ம் ஆண்டு டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா என்று டாட்டா பெயரிட்டது.
  3. 1948ம் ஆண்டு முதல்முறையாக டாட்டா நிறுவனத்தின் விமானம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிகள் விமான சேவையைத் தொடங்கியது. நாட்டிலேயே முதல்முறையாக மத்திய அரசும், தனியார் நிறுவனமும் இணைந்து விமானசேவையைத் தொடங்கின.
  4. 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டது.

டாடா நிறுவனம் ஏர் இந்தியா என தனது விமானத்துக்கு பெயர் வைப்பதற்கு முன் தனது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன்பின்புதான் ஏர் இந்தியா என்ற பெயரை டாடா நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதை டாடா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Air India: A name chosen through opinion poll more than 75 years ago

டாடா குழுமம் ட்விட்டரில் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில்  கூறுகையில் “ இந்தியாவின் முதல் விமானநிறுவனத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ், பான்-இந்தியா ஏர்லைன்ஸ், டிரான்ஸ் இந்தியா ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா ஆகிய 4 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், இந்த 4 பெயரில் எந்த பெயரை வைப்பது எனத் தெரியவில்லை. 

இதையடுத்து, ஜனநாயக முறைப்படி டாடா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இந்த 4 பெயர்களையும் கூறி அவர்களின் விருப்பத்தின்படி, வாக்குகளின் அடிப்படையில் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊழியர்களிடம் வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு. எந்தெந்தப் பெயர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

Air India: A name chosen through opinion poll more than 75 years ago

வாக்கெடுப்பின் முடிவில், ஏர் இந்தியா என்ற பெயருக்கு 64 வாக்குகள் கிடைத்தன. இந்தியன் ஏர் லைன்ஸ் பெயருக்கு 51 வாக்குகளும், டிரான்-இந்தியா ஏர்லைன்ஸ் பெயருக்கு 28 வாக்குகளும், பான்-இந்தியா ஏர் லைன்ஸ் பெயருக்கு 19 வாக்குகளும் கிடைத்தன. குறைவான ஆதரவு உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. 72 வாக்குகளைப் பெற்ற ஏர் இந்தியா, 58 வாக்குகள் பெற்ற இந்தியன் ஏர் லைன்ஸ் பெயர் சூட்டப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

அது மட்டும்லலாமல் # ஏர்இந்தியாஆன்போர்ட், #விங்ஸ்ஆப்சேஞ் என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளது. கடந்த 1946-ம் ஆண்டு டாடா நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர இதழில் இருந்து இந்ததகவலை எடுத்து டாடா குழுமம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios