Asianet News TamilAsianet News Tamil

ஏஐ பள்ளி நடத்திய இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் போட்டி..! வெற்றியாளர்களுக்கு மிகச்சிறந்த பரிசுகள்

ஏஐ ஸ்கூல் ஆஃப் இந்தியா பள்ளி , இந்திய பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆன்லைன் போட்டியை நடத்தியது.

ai school of india conducted indias biggest online covid warrior contest
Author
Chennai, First Published Sep 26, 2021, 3:46 PM IST

ஏஐ(AI) ஸ்கூல் ஆஃப் இந்தியா மாணவர்களுக்கு உலகின் பல பிரச்னைகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான தீர்வை வழங்குபவர்களாகவும், பூமிக்கோளத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க வல்லவர்களாகவும் உருவாக்குகிறது. நிஜவுலக நிஜவுலகின் பிரச்னைகளுக்கு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் விதம் வியப்பளிக்கிறது. 

மாணவர்களின் திறமைகளை பரிசோதிக்க, நமது பள்ளி(ஏஐ பள்ளி) சார்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 6000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கொரோனா பிரச்னைகளுக்கு, 3 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பல புதுமையான தீர்வுகளை கொடுத்தனர்.

இந்த போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் 45% பேர் மாணவிகள் தான். சர்வதேச தரம் வாய்ந்த நடுவர் குழு தான் முடிவுகளை எடுத்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இண்டர்ன்ஷிப், லேப்டாப், டேப்லட், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வௌச்சர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுமே மிகச்சிறப்பாக புதுமைகளை செய்திருந்தனர். எனவே நடுவர்களுக்கு வெற்றியாளர்களை தீர்மானிப்பதே மிகவும் கடினமாக இருந்தது. 

கொரோனா பெருந்தொற்றால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுனால் பள்ளிக்கல்வி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய ஏஐ ஸ்கூல் ஆஃப் இந்தியா பள்ளியின் தலைவர் ரமண பிரசாத், ”பெரும்பாலான நேரங்களில் தியரிடிக்கலாகவே இருக்கிறது கல்வி. எனவே எதார்த்தத்தையும், மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும் புரிந்துகொள்ளும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும், ஏஐ ஸ்கூல் ஆஃப் இந்தியா இந்த முயற்சியை முன்னெடுத்தது. ஆரம்பத்தில் இந்த முயற்சி எந்தளவிற்கு ரீச் ஆகும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதிகமானோர் கலந்துகொண்டது எங்களை(ஏஐ பள்ளி) ஊக்கமும் உற்சாகமும் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios