தாறுமாறா உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் 104 ரூபாய் உயர்வு..!  

தொடர் ஏழு முகத்தை கண்ட தங்கம் விலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் இன்றும் விலை உயர்வை கண்டுள்ளது 

கடந்த இரண்டு வாரங்களாக வீடுகளில் உள்ள உயர்ந்த தங்கம் விலை ரூபாய் 28 ஆயிரத்தை கடந்து 29 ஆயிரத்தை நெருங்கி நிற்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 34 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மனக் கவலையை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கிராம் ஆபரண தங்கம் கிராமத்து 13 ரூபாய் அதிகரித்தது 3582 ரூபாயாக உள்ளது. அதன்படி சவரன் ரூபாய் 28 ஆயிரத்து 656 ஆயிரமாகவும் உள்ளது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி 20 பைசா மட்டுமே குறைந்து 47 ரூபாய் 30 பைசாவாக உள்ளது.