Today Chennai Gold Rate: ஊசலாட்டத்தி்ல் தங்கம் விலை! கொஞ்சூண்டு குறைவு! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும், சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்துக்கு குறையவில்லை
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும், சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்துக்கு குறையவில்லை
தங்கம் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் விலை குறைந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.48 உயர்ந்த நிலையில் இன்று 8 ரூபாய் சரிந்துள்ளது.
தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தைக் கடந்தது: மிடில் கிளாஸ் நிம்மதியிழப்பு! நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,383ஆகவும், சவரன், ரூ.43,064ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 8 ரூபாய் சரிந்து ரூ.5,375ஆகவும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து ரூ.43 ஆயிரமாகச் சரிந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,375க்கு விற்கப்படுகிறது.
ஏற்றத்தில் தங்கம் விலை! மீண்டும் சவரன் ரூ.43ஆயிரத்தை நெருங்குகிறது
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பின் அதிகரித்த தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. சவரன் ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்துக்குள் சரிந்த நிலையில் மீண்டும் ரூ.43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று சிறிய விலைக் குறைவுடன் இருந்தாலும் தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்துக்கு குறையவில்லை.
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துடன் நகர்வதால் நடுத்தரக் குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், கிலோ ரூ.74,000 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.73,500 ஆகச் சரிந்துள்ளது.