gold rate today: தங்கம் விலையில் திடீர் மாற்றம்! உயர்வா, குறைவா? இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,715 ஆகவும், சவரன், ரூ.37,720 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.4,722 ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.37,776ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,722ஆக விற்கப்படுகிறது.
starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்
இந்தவாரம் தொடங்கியதிலிருந்து தங்கம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை கிராம் ரூ.4,805ல் தொடங்கியது இன்று வாரத்தின் கடைசி நாளில் ரூ.4,722 ஆகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு, 83 ரூபாய் குறைந்துள்ளது. சவரனுக்கு, 664 ரூபாய் குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் பெரிய ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசு அதிகரித்து, ரூ.58.20ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,200 ஆகவும் அதிகரித்துள்ளது.
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- Chennai gold rate
- Gold rate today
- gold price
- gold price live
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate 8 gram
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu