AdaniEnterprises: அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு 2 நாட்களில் 30% அதிகரிப்பு
அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு தேசியப் பங்குச்சந்தை நிப்டியில் கடந்த 2 நாட்களில் 31 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு தேசியப் பங்குச்சந்தை நிப்டியில் கடந்த 2 நாட்களில் 31 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு 14 சதவீதம் உயர்ந்திருந்தநிலையில் இன்று வர்த்தகத்தில் 15 சதவீதம் விலை ஏற்றத்துடன் நகர்ந்து பங்கு மதிப்பு ரூ.1,567 ஆக உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி, குடும்பத்தினருக்கு உச்சபட்ச Z-plus பாதுகாப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த முறைகேடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் ரூ.20ஆயிரம் கோடிக்கு எப்பிஓ வெளியிட்டிருந்தது.ஆனால் சந்தை சூழலைக் கருதி தனது எப்பிஓ அறிவிப்பைத் திரும்பப் பெற்று முதலீட்டாளர்களிடம் பணத்தை அதானி குழுமம் வழங்கியது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பாக அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு அதிகபட்சமாக ரூ.4,189ஆக இருந்தது. ஆனால், அதன்பின் 60 சதவீதம் மதிப்பு சரிந்து, ரூ.1,567 ஆகக் குறைந்துள்ளது.
என்எஸ்இ பட்டியலில் அதானி நிறுவனங்கள்| பதறும் முதலீட்டாளர்கள்! SEBI தலையிட கோரிக்கை
இதற்கிடையே முந்த்ரா அலுமினியதத்தில் உள்ள அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்துக்கு 128 மில்லியன் டன் பாக்ஸைட் ஒப்பந்தம் ஒடிசாவில் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காலை முதலே அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் ஏற்றத்துடன் நகர்ந்தன
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பின், அதானி குழுமப் பங்குகள் மதிப்பு பங்குச்சந்தையில் ஏறக்குறைய ரூ.12லட்சம் கோடியை குறைந்தது. சர்வதேச முதலீட்டாளர்களை அமைதிப்படுத்தவும், அவர்களை நம்பிக்கை ஏற்படுத்தவும் 3 நாட்கள் கூட்டத்துக்கு ஆசியா முழுவதும் அதானி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மார்ச் மாதத்துக்குள் 69 முதல்79 கோடி டாலர் கடன்களை திருப்பிச் செலுத்திவிடுவோம் என அதானி குழுமம் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
80 கோடி டாலருக்கு கடன் வசதி கிடைத்துள்ளதால், அதை வைத்து, அதானி கிரீன் எனர்ஜிக்கு 75 கோடி கடன் வழங்க முடியும் என முதலீட்டாளர்களிடம் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.