Asianet News TamilAsianet News Tamil

abott india:ஏலத்தில் பங்கேற்க Abbott Healthcare நிறுவனத்துக்கு 5 ஆண்டுகள் தடை: தமிழக அரசு அதிரடி: காரணம் என்ன?

abott india  :அபாட் ஹெல்த்கேர்(Abbott Healthcare) நிறுவனம் முக்கியத் தகவல்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் நடக்கும் மருந்து தொடர்பான எந்த ஏலத்திலும் 5 ஆண்டுகள் பங்கேற்கத் தடைவிதித்து தமிழக அ ரசு உத்தரவி்ட்டுள்ளது.

abott india : Tamil Nadu agency blacklists Abbott for five years for hiding information
Author
Chennai, First Published Jun 9, 2022, 11:37 AM IST

அபாட் ஹெல்த்கேர்(Abbott Healthcare) நிறுவனம் முக்கியத் தகவல்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் நடக்கும் மருந்து தொடர்பான எந்த ஏலத்திலும் 5 ஆண்டுகள் பங்கேற்கத் தடைவிதித்து தமிழக அ ரசு உத்தரவி்ட்டுள்ளது.

ஆனால் அபாட் ஹெல்த்கேர் நிறுவனம் தரப்பில் எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை. ஏற்கெனவே, மத்திய கொள்முதல் அமைப்பான சுகாதார சேவைக்கான பொது இயக்குநரகம்,இஎஸ்ஐசி ஆகியவையும் அபாட் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளது.

abott india : Tamil Nadu agency blacklists Abbott for five years for hiding information

இந்தத் தடைவிதிக்கப்பட்டதை மறைத்து, தமிழக அரசின் மருந்துக் கொள்முதல் ஏலத்தில் அபாட் நிறுவனம் பங்கேற்றது. தங்களுக்கு மத்திய அரசால் தடைவிதிக்கப்பட்ட தகவலை மறைத்து ஏலத்தில் பங்கேற்றது தமிழக அரசால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்தத்த டையை அபாட் நிறுவனத்துக்கு விதித்தது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் “ சென்னையைச் சேர்ந்த பாரீஸ் சட்ட சேவை நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் அபாட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் விவரங்களைஆய்வு செய்தோம்.

அதில் அபாட்ஹெல்த்கேர் நிறுவனத்தை ஏலத்தில் பங்கேற்க ஏற்கெனவே மத்திய கொள்முதல் அமைப்பும், இஎஸ்ஐசியும் தடைவிதித்திருந்தன. இந்தத் தடையை எங்களிடம் தெரிவி்க்காமல் மறைத்து ஏலத்தில் பங்கேற்றுள்ளது.

ஏலத்தில் பங்கேற்க வரும் நிறுவனங்கள் சுயவிவரங்களை எழுதி, எந்த அமைப்பாலும், அரசாலும் தடைவிதிக்கப்படவில்லை என்று எழுதித்தர வேண்டும். ஒருவேளை ஏதாவது அமைப்பால் அல்லலது அரசால் தடை செய்யப்பட்டிருந்தால், அதையும் குறிப்பிட வேண்டும்.

abott india : Tamil Nadu agency blacklists Abbott for five years for hiding information

ஆனால், அபாட் நிறுவனம் மத்தியஅரசு விதித்த தடைகளை மறைத்து தமிழக அரசின் ஏலத்தில் பங்கேற்றது.
இதுகண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அபாட்ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு தமிழக அசு 5 ஆண்டுகள் மருத்துவ ஏலத்தில் பங்கேற்கத் தடைவிதித்தது. நாங்கள் மட்டும் தனியாகவிதிக்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்கள் ஏற்கெனவே விதித்துவிட்டன.

எங்களுக்கு வந்த புகாரையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் அபாட் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு பல அமைப்புகள், நிறுவனங்கள் தடைவிதித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அபாட் நிறுவனத்திடம் விளக்கம் கோரினோம், ஆனால் மனநிறைவான விளக்கம் அளிக்காததால் 5 ஆண்டுகள் ஏலத்தில் பங்கேற்கத் தடைவிதித்தோம். தேவையின் அடிப்படையில் இதயத்துக்கான ஸ்டென்ட், ஐப்ரூபன் மாத்திரைகளை அபாட் நிறுவனத்திடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும்.  இனிமேல் மாற்று வழியை தேடுவோம்.” எனத் தெரிவித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ட்ரோமிக்ஸ் எனும் ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மருந்தின் தரம், சப்ளையில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, டிஜிஹெச்எஸ் தடை விதித்தது. தடைவிதித்கப்பட்டதை மறைத்து இஎஸ்ஐசி ஏலத்தில் பங்கேற்றதால் இஎஸ்ஐசி அமைப்பும் அபாட் நிறுவனத்துக்கு தடை விதித்தது.

abott india : Tamil Nadu agency blacklists Abbott for five years for hiding information

அபாட் ஹெல்த்கேர் தவிர, ஸ்ரீனிவாஸ் லேபரேட்டரி, கான்ஹா பயோஜெனடிக், கேப்டேப் பயோடெக், ஜீ லேபரட்டரிஸ், ஜேக்ஸன் லேப்பரட்டரீஸ், விஜய் லேட்டஸ், லெனோரோ க்ளோவ் ஆகிய நிறுவனங்களும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios