aadhaar card:loan: என்ன சொல்றீங்க! ஆதார் கார்டு வெச்சு உடனடி கடன் வாங்கலாமா! விண்ணப்பிப்பது எப்படி?
aadhaar card:loan :ஆதார் கார்டு இருந்தாலே ஒருவர் எளிதாக கடன் பெற்று விடமுடியும். இதற்கான பல்வேறு வசதிகளை வங்கிகள் அளித்துள்ளன.
Aadhaar card: ஆதார் கார்டு இருந்தாலே ஒருவர் எளிதாக கடன் பெற்று விடமுடியும். இதற்கான பல்வேறு வசதிகளை வங்கிகள் அளித்துள்ளன.
ஆதார் முக்கியம்
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக மாறிவி்ட்டது. பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது முதல் வங்கிக்கணக்கு தொடங்குவதுவரை ஆதார் முக்கியமானது. ஆனால், ஆதார் கார்டு இருந்தாலே எளிதாகக் கடன் கிடைக்கும் என்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.
ஆதார் மூலம் கடன்
தொழில் தொடங்க, தொழில் முன்னேற்றம், தனிநபர் கடன், வாகனக் கடன் என அனைத்துக்கும் கடன் பெறுவதர்கு வங்கிக்கு பலமுறை நடந்தால்தான் கடன் கிடைக்கும். அதிலும் பல ஆவணங்கள் சரிபார்ப்பு, கேரண்டி கையொப்பம், காத்திருப்பு ஆகியவற்றுக்குப்பின்புதான் கடன் கிடைக்கிறது.
ஆனால் ஆதார் மூலம் கடன் பெறும் திட்டத்தில் வங்கிகள் கேட்கும் தகுதி ஒருவருக்கு இருந்தால், உடனடியாக கடனுதவி வழங்கப்டுகிறது. ஆதார் கார்டு உதவியுடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால் எந்தவிதத் தாமதம் இன்றி கடன் வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎப்சி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் கடன் வழங்குகின்றன
சிபில் ஸ்கோர்
ஆனால், ஆதார் கார்டு மூலம் கடன் பெறுவோர் ஒரு விஷயத்தை கண்டிப்பாகத் தெரி்ந்திருத்தல் அவசியம். அதாவது கடன் பெறுவோர் தன்னுடைய கிரெடிட் ஸ்கோர்(credit score) அல்லது சிபில் ஸ்கோரை(cibil score) கண்டிப்பாக தெரிந்திருத்தல் அவசியம். கடன் கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு சிபில் ஸ்கோர் 750 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலே வங்கிகள் விரைவாக கடனுதவி அளிக்கும். அதிலும், குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்கின்றன.
ஆதலால் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோரை 750 புள்ளிகள் வைத்திருப்போர் ஆதார் கார்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். சிபில் ஸ்கோரை உயர்த்துவதற்கு முன்பு வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்தி முடித்தல், கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உரிய நேரத்துக்குள் செலுத்துதல், சரியான கடன் திட்டத்தில் கடன் பெறுதல், கடன் பெற்றுவி்ட்டு உரிய காலத்துக்குள் அடைத்தல் போன்றவைமூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருப்பவர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே ஆதார் கார்டு மூலம் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
1. முதலில் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு சென்று ஆதார் கார்டு மூலம் கடனுதவி என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். சில நேரங்களில் மொபைல் ஆப்ஸில் கூட இந்தவசதி இருக்கிறது.
2. நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி(OTP) எண் வரும். அதை பதிவு செய்ய வேண்டும்.
3. அதன்பின் கடனுதவி திட்டத்தில் தனிநபர் கடன் என்ற பட்டனை கிளிக் செய்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
4. தேவைப்படும் கடன் தொகை, பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்ப வேண்டும்.
5. அதன்பின் முக்கியமாக ஆதார் கார்டு , பான் கார்டு நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
6 முறைப்படி கேஒய்சி நடைமுறைகள் முடிந்தபின், உங்களின் கிரெடிட் ஸ்கோர் அளவு வங்கியால் ஆய்வு செய்யப்படும். அது 750க்கு மேல் இருந்தால், கடனுதவி உடனடியாகக் கிடைக்கும்.