Asianet News TamilAsianet News Tamil

Small Savings Interest Rate: 8 சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி உயர்வு!PPF, செல்வமகள் திட்டம் கைவிரிப்பு

8 வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு 4வது காலாண்டுக்கான வட்டிவீதத்தை 20 முதல் 110 புள்ளிகள்வரை உயரத்தியுள்ளது. ஆனால், PPF மற்றும் செல்வ மகள்(சுகன்யா சம்ரிதி) திட்டத்துக்கு மட்டும் வட்டிவீதத்தை உயர்த்தவில்லை.

8 small savings plans' interest rates will rise in the fourth quarter; PPF and Sukanya rates will stay unchanged.
Author
First Published Dec 31, 2022, 9:56 AM IST

8 வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு 4வது காலாண்டுக்கான வட்டிவீதத்தை 20 முதல் 110 புள்ளிகள்வரை உயரத்தியுள்ளது. ஆனால், PPF மற்றும் செல்வ மகள்(சுகன்யா சம்ரிதி) திட்டத்துக்கு மட்டும் வட்டிவீதத்தை உயர்த்தவில்லை.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டிவீதத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக வட்டிவீதம் உயர்த்தப்படாமல் இருந்தநிலையில்  நடப்பு 3வது காலாண்டிலும் அதைத் தொடர்ந்து 4வது காலாண்டிலும் வட்டியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 

Union Budget 2023-24: பட்ஜெட் 2023-24: வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயரலாம்?

8 small savings plans' interest rates will rise in the fourth quarter; PPF and Sukanya rates will stay unchanged.

இந்த பிபிஎப் திட்டத்துக்கு வட்டிவீதம் 7.1 சதவீதமாகவும், செல்வமகள் திட்டத்துக்கு 7.6%மாகத் தொடர்கிறது. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் சிறுசேமிப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் வட்டிவீதத்தை குறைத்தநிலையில் இப்போது மீண்டும் அ ரசு உயர்த்தியுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரம்(KVP) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள்(NSC) ஆகியவற்றுக்கு 20 புள்ளிகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது இதன் மூலம் இந்த இரு திட்டங்களுக்கான வட்டி வீதம் 7 சதவீதத்தில் இருந்து 7.20சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

பிரதமர் மோடியால் மட்டும் நான் வளர்ந்துவிடவில்லை; ராஜீவ் காந்தி காலத்தில் எனது பயணம் துவங்கியது: கவுதம் அதானி!

3-ம் காலாண்டிலும் 12 சிறுசேமிப்புத் திட்டங்களில் 5 திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு வட்டியை உயர்த்தியது. தற்போது தொடர்ந்து 2வது முறையாக வட்டிவீதத்தை உயர்த்துயுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் பிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீதம் வட்டி அளித்துள்ளது, ஆனால், 7.72 சதவீதம் வட்டி வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

8 small savings plans' interest rates will rise in the fourth quarter; PPF and Sukanya rates will stay unchanged.

அதேபோல சுகன்யா சம்ரிதி திட்டத்தில் 7.6 சதவீதத்துக்குப் பதிலாக 8.22 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உயர்த்தவில்லை

முதியோருக்கான சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டிவீதம் 8 சதவீதமாகவும்,  மாத வருவாய் தரும் திட்டங்களுக்கும் வட்டி வீதம் 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இரு திட்டங்களுக்கும் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

முதியோர் சேமிப்புத்திட்டங்களுக்கு வட்டிவீதம் 7.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக 3வது காலாண்டுக்கு உயர்த்தப்பட்டது, ஆனால், ஃபார்முலாவின்படி, 8.04 சதவீதமாக இருக்க வேண்டும்.

ஃபார்முலாவின்படி வட்டிவீதத்தை உயர்த்துவதற்கும், மத்திய அரசு வட்டியை உயர்த்தியதற்கும் பெரிய இடைவெளி நிலவுகிறது. தேசிய சிறுமிப்பித் திட்டங்களுக்கு அடுத்த காலாண்டில் 7.1 %, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.2 % நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபார்முலாவின்படி கிசான்விகாஸ் பத்திரத்துக்கு 7.6%, என்எஸ்இ திட்டத்துக்கு 7.4% வழங்கிட வேண்டும்

Small Savings Interest Rate PPF, செல்வமகள் சேமிப்புத் திட்டம்,முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கு வட்டி உயருமா?

8 small savings plans' interest rates will rise in the fourth quarter; PPF and Sukanya rates will stay unchanged.

ஓர் ஆண்டு வைப்புத்தொகைக்கு வட்டிவீதம் 6.6சதவீதமாகவும், 2 ஆண்டுகள் வைப்புத்தொகைக்கு 6.8 சதவீதமும், 3 ஆண்டுகள் வைப்புத் தொகைக்கு 6.9 சதவீதமும் வட்டிவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வைப்புத்தொகைத் திட்டங்களுக்கு 110புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன

5 ஆண்டுகள் வைப்புத் தொகைக்கு 3வது காண்டில் இருந்த 6.7சதவீதவட்டிவீதம் 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான ரெக்கரிங் டெபாசிட் வட்டிவீதம் 5.8சதவீதமாகத் தொடர்கிறது
 

Follow Us:
Download App:
  • android
  • ios