7th Pay Commission: 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்புதல்

நீண்டகாலமாக மத்தியஅரசு ஊழியர்கள் ஊதியத்தை நிர்ணயிக்கும் பிட்மென்ட் பேக்டர்(fitment factor) உயர்த்தவேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை பரிசீலிக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளி்க்கும் என்று ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

குறைந்துவரும் கொரோனா

2020ம் ஆண்டு கொரோனா வைரஸ்பரவலின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்த்தப்பட்டநிலையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டநிலையில் மத்திய அரசின் வரிவருவாய் நிலவரமும் சீரடைந்து வருகிறது.

இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் மத்தியஅரசுடன் ஊதியத்தை நிர்ணயிக்கும் பிடமென்ட் ஃபேக்டர் குறித்து பேச்சு நடத்தத் தொடங்கியுள்ளன.

ரூ.18ஆயிரம்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ.18ஆயிரமாக இருக்கிறது, இதை பிட்மென்ட் ஃபேக்டர்படி ரூ.26ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போது பிட்மெண்ட் ஃபேக்டர் படி 2.57 என்ற அளவில் ஊதியம் வழங்கப்டுகிறது. 

இதை 3.68 என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிட்மென்ட் ஃபேக்டர் படி 3.68 என்ற அளவில் உயர்த்தப்பட்டால் குறைந்தபட்சமாக ரூ.8ஆயிரம் ஊதிய உயர்வு கிடைக்கும். இதனால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரத்திலிருந்து ரூ.26ஆயிரமாக அதிகரிக்கும்.

ரூ.26ஆயிரமாக அதிகரிக்கும்

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் பிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இது 3.68% அதிகரிக்கும்போது, அடிப்படை ஊதியம் ரூ.26ஆயிரமாக உயரும்

உதாரணமாக ஒருவரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரமாக இருந்தால்(இதரபடிகள் நீங்கலாக) அவர், ரூ.46,260(18,000x2.57=46,260) பெறுவார். இது 2.57% பிட்மென்ட் ஃபேக்டர் அளவாகும்.

7-வது ஊதியக்குழு

7-வது ஊதியக்குழுவின்படி பிட்மென்ட் ஃபேக்டர் 3.68% என உயர்த்தப்பட்டால் ஊதியம் பெறும் அளவு ரூ.95,680ஆக அதிகரிக்கும்.(26000x3.68=95,680) என கணக்கிடப்படும். 

கடந்த 2017ம் ஆண்டு 7-வதுஊதியக்குழுவின் 34 திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது. இதனால் குறைந்தபட்சஊதியத்தொகை ரூ.7ஆயிரத்திலிருந்து ரூ.18ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிக்கு ஊதியம் ரூ.90ஆயிரத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.