Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் பலன்கள்! விரைவில் வரும் சூப்பர் அறிவிப்பு!

அகவிலைப்படி விகிதம் ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலையில் திருத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் மொத்தம் 8% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது.

7th Pay Commission: Central govt employees likely to get two benefits soon; check details sgb
Author
First Published Jan 9, 2024, 5:05 PM IST

புத்தாண்டு 2024 ஏற்கனவே மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தொடங்கிவிட்டது. புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வீட்டு வாடகை தொகை (HRA) என இரண்டு சலுகைகளை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும்.

மத்திய அரசு மற்றும் வாடகை தொகை இரண்டும் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். வாடகைத் தொகை நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது. வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சோனி - ஜீ இணைப்பு கைவிடப்படுவதாக வெளியான தகவல் தவறானது: ஜீ என்டர்டெயின்மென்ட் விளக்கம்

7th Pay Commission: Central govt employees likely to get two benefits soon; check details sgb

எடுத்துக்காட்டாக, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் வசிக்கும் பணியாளரை விட முதல்கட்ட நகரங்களில் வசிக்கும் பணியாளர்கள் அதிக வாடகைத் தொகை பெறுவார்கள்.

பொதுவாக, அகவிலைப்படி விகிதம் ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலையில் திருத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் மொத்தம் 8% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது.

தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் 4% அல்லது அதற்கு மேற்பட்ட உயர்வை எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால் அது ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும்.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios