Asianet News TamilAsianet News Tamil

67% குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் தற்காலிக மூடல்; 66% லாபம் குறைந்தது: ஆய்வில் தகவல்

2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களில் 67 சதவீதம் தற்காலிகமாக மூடப்பட்டன, இவற்றின் லாபம் 66 சதவீதம் குறைந்தது என்று சிட்பி(sidbi) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

67 % MSMEs were temporarily shut, profits dipped for 66 % in FY21: SIDBI survey
Author
New Delhi, First Published Feb 7, 2022, 1:03 PM IST

2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களில் 67 சதவீதம் தற்காலிகமாக மூடப்பட்டன, இவற்றின் லாபம் 66 சதவீதம் குறைந்தது என்று சிட்பி(sidbi) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியிடம்(சிட்பி), குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்து சர்வே செய்ய மத்திய குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் கூறியது. கடந்த 2020-21 நிதி ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இந்த ஆய்வறிக்கையை மத்திய குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயன் ராணே மக்களவையில் கடந்த வாரம் தெரிவித்தார். அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

67 % MSMEs were temporarily shut, profits dipped for 66 % in FY21: SIDBI survey

நாட்டில் கொரோனா பெருந்தொற்று, அதைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கையால் குறு,சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டது குறித்து இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 27ம் தேதி அறிக்கை அளித்துள்ளது. இந்த ஆய்வில் 20 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,029 குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 67%குறு,சிறு, நடுத்தர தொழில்களில் பெருந்தொற்று காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டன. 

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்துக்கு அதிகமானோர்  குறு,சிறு,நடுத்தரத் தொழில்கள் சரிந்துவிட்டதாகவும், 25 சதவீதம் பேர் தங்கள் வருமானம் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 66 சதவீத தொழில்களில் லாபம் குறைந்துள்ளது, வருமானத்தின் அளவும் சரிந்துவிட்டது.
அதேசமயம், 65 % குறு,சிறு,நடுத்தரத் தொழில்களுக்கு அவசரகால கடன் உறுதித் திட்டம் இருந்திருக்கிறது, 36 சதவீதத் தொழில்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உறுதித் திட்டத்தில் கடன் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு குறு,சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான வரையரையை மாற்றி அமைத்தது. அதன்படி, ரூ. ஒரு கோடிமுதல் ரூ.5 கோடிவரை விற்றுமுதல், முதலீடு இருக்கும் நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டு விற்று முதல் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீடு ரூ.50 கோடியாகவும், விற்றுமுதல் ரூ.250கோடியாகவும் உயர்த்தப்பட்டது

67 % MSMEs were temporarily shut, profits dipped for 66 % in FY21: SIDBI survey

அநேநேரம், பெருந்தொற்று காலத்தில் குறு,சிறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் எத்தனை தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள் என்ற விவரங்கள் அரசிடம் இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குறு,சிறு,நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள்அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் கூறுகையில் “ அமைப்பு மற்றும் அமைப்பு சாரா துறையில் உள்ள குறு,சிறு,நடுத்தரத் தொழில்கள் நிரந்திரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்பட்டது குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios