வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு 540 ஜெர்சி மாடுகள் இறக்குமதி ...! வெடிக்கிறது போராட்டம் ..!!

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து, போராட்டங்கள் வெடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில், தமிழகத்திற்கு 540 ஜெர்ஸி இன மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

என்ன நடக்கிறது ?

இந்நிலையில், நாட்டு மாடுகளை அழிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறி, , ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருந்து, 540 ஜெர்ஸி இன பசுக்களை தமிழக அரசு இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட மாடுகள் , கதார் ஏர்வேஸ்க்குச் சொந்தமான சரக்கு விமானத்தில் ஸ்விட்சர்லாந்தில் இருந்து, சென்னை கொண்டுவரப்பட்டு, தமிழகக் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதெல்லாம் ஜெர்சி மாடுகளை இறக்குமதி :

ஜெர்ஸி பசுக்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இறக்குமதி செய்வது வழக்கம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 1000 ஜெர்ஸி பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டு, 500 பசுக்கள் கொல்கத்தாவுக்கும், மற்ற 500 அனுப்பி வைக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிபிடத்தக்கது.