தொலைபேசி சந்தையில் ஜியோ நிறுவனம் புகுந்து ஆட்டம் காட்டுவதால் முன்னணியில் இருந்த தொலைபேசி நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் இப்போது நடுக்கம் காண ஆரம்பித்து இருக்கிறது.

ஜியோ வருகைக்கு பிறகு சில தொலைபேசி நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்டெல்- ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூடிவிட்டுச் சென்று விட்டன. ஏர்டெல், ஐடியா, வோடாபோன், பிஎஸ்என்எல், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்களில் சிம்கார்டுகளை இரண்டாம் நிலையாக பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ சிம் கார்ட்டையே டேட்டாவுக்கும் பேசுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வேயில் கடந்த 6 ஆண்டாக ஏர்டெல் நிறுவனம் சேவை வழங்கி வந்தது. தற்போது, இந்த சேவை கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்தது. இதனால் ரயில்வேயில் அனைத்து அழைப்புகளுக்கு ஜியோ இலவசமாக கொடுத்து, 1.95 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுந்துள்ளது.

ரயில்வே துறையில் மட்டும் ஏர்டெல்லுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்தது. அதனை தற்போது ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு இனி கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும் பறிபோகிறது. ரயில்வேயில் 1.95 லட்சம் சேவை அளித்தாலும், ஏர்டெல்லை பயன்படுத்தி வந்த ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் சேர்த்து தற்போது, 3.78 லட்சம் ஊழியர்களை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது ஜியோ.

கடந்த 3ம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் இந்தியா மற்றும் சவுத் ஆசியாவில் மட்டும் 49 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதனால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறது ஏர்டெல்.