இந்தியர்கள் அனைவருக்கும் 4ஜி செல்போன் குறைந்த கட்டண திட்டங்களுடன் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது: 

ஒவ்வொரு விநாடிக்கும் 7 பேர் ஜியோவில் இணைகின்றனர். தற்போது ஜியோவில் 125 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். மொபைல் இணைய சேவையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை முந்தியுள்ளது.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 4ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படும். ஜியோவை பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கை டிஜிட்டல் ஆகும், அழகாகும். இந்த போனை அனைத்து டிவியிலும் இணைத்து, இணைய சேவை மூலம் வீடியோ, படங்களை பார்த்து கொள்ளலாம். 

ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு டிவியில் வீடியோ பார்க்கலாம். ரூ.153க்கு இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் இணைய சேவை வழங்கப்படும்.

இந்த மொபைல் போன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்று கொள்ளலாம். மொபைல் போனுக்கு வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.