மாலை நேர நிலவரப்படி , சவரன் ரூ 24 அதிகரிப்பு ....!!!
தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக , சற்று குறைவான விலையில் தங்கம் விற்பனை யானது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம், 2 ஆயிரத்து 875 ரூபாயாக இருந்தது ,தற்போது 3 ரூபாய் உயர்ந்து, 2 ஆயிரத்து 878 ரூபாயாக உள்ளது.
அதன்படி , சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 23,௦24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 3௦ ஆயிரத்து 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 47 ரூபாய் 10 காசுக்கும் ,
ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 050 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது…
