Asianet News TamilAsianet News Tamil

Yamaha Aerox 2022 : அசத்தல் அப்டேட்களுடன் 2022 ஏரோக்ஸ் அறிமுகம் - ஆனால் ஒரு டுவிஸ்ட்

யமஹா நிறுவனம் 2022 ஏரோக்ஸ் மேக்சி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டரை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது.

2022 Yamaha Aerox launched in Indonesia
Author
Tamil Nadu, First Published Feb 8, 2022, 1:02 PM IST

யமஹா நிறுவனம் 2022 ஏரோக்ஸ் மேக்சி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2021 ஏரோக்ஸ் மாடல் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய 2022 ஏரோக்ஸ் மாடல் ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தோனேசியாவில் ஏரோக்ஸ் மாடல் கனெக்டெட் மற்றும் ஏ.பி.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கனெக்டெட் வேரியண்ட்- மேட் பிளாக் சியான், டார்க் கிரே எல்லோ, பிளாக் மற்றும் ரெட் ஹைலைட்கள், ரெட் மற்றும் பிளாக் பாடி வொர்க் என நான்கு புதிய நிறங்களிலும் ஏ.பி.எஸ். வேரியண்ட் - மேட் பிளாக் கோல்டு மற்றும் மேட் வைட் கோல்டு என இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது.

2022 Yamaha Aerox launched in Indonesia

இதன் இந்திய  வெர்ஷனில் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் யமஹா நிறுவனத்தின் வை கனெக்ட் செயலிக்கான வசதியும் வழங்கப்படுகிறது. 

ஏரோக்ஸ் மாடலில் R15 மாடலில் உள்ளதை போன்றே 155சிசி, லிக்விட் கூல்டு, VVA என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. திறன், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.  

Follow Us:
Download App:
  • android
  • ios