கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.

2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மகாராஷ்டிராவில் உள்ள ஷோரூம் வந்தடைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்தியாவில் தற்போது தான் இந்த மாடல் முதல் முறையாக காணப்பட்டு இருக்கிறது. 

புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்டிரீட் மற்றும் ஆஃப் ரோடு என இரண்டு ரைடு மோட்கள், 10-ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள், புதிய நிறங்களில் கிடைக்கிறது. கே.டி.எம். ஃபேக்டரி மோட்டோ ஜி.பி. டீம் பைக் மாடலை தழுவிய ஆரஞ்சு மற்றும் புளூ நிற பெயிண்டிங் தோற்றத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறது.

இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலிலும் 373.4சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 ஹெச்.பி. திறன், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் டியூபுலர் ஸ்டிரீட் டிரெலிஸ் ஃபிரேம், WP USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போதைய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் விலை இந்திய சந்தையில் ரூ. 3.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 2022 கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலின் விலை தற்போதைய மாடலை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.