பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 X3 டீசல் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 X3 எஸ்.யு.வி. மாடலின் இரண்டு பெட்ரோல் வேரியண்ட்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த மாடலின் டீசல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. X3 xDrive20d லக்சரி எடிஷன் விலை ரூ. 65.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் X3 xDrive20d லக்சரி எடிஷன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் X3 xDrive 30i ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ் மற்றும் X3 xDrive 30i M ஸ்போர்ட் மாடல்களுடன் இணைகிறது. இரு மாடல்களின் விலை ரூ. 59.90 லட்சம் மற்றும் ரூ. 65.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. தோற்றத்தில் புது டீசல் மாடலும் அதன் பெட்ரோல் வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. X3 xDrive20d லக்சரி எடிஷன் மாடலில் 2 லிட்டர் 4 சிலிண்டர், டுவின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் ஹோல்டு ஃபன்ஷன் மற்றும் பெட்ரோல் மாடல்களில் உள்ளதை போன்ற பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
