Asianet News TamilAsianet News Tamil

20 லட்சம் விவசாயிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்... பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

20 lakh farmers have Luck....Nirmala Sitharaman
Author
Delhi, First Published Feb 1, 2020, 12:07 PM IST

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

சிறப்பு அம்சங்கள்;- 

* ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 4% செலவு குறைகிறது. 

* கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் புதிய வரிசெலுத்துவோர் உருவாகியுள்ளனர். 

* ஏழைகள் நேரடியாக பன்பெறும் வகையில் ஏராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 

* வரி கணக்கு செலுத்த வரும் ஏப்ரல் மாதம் முதல் எளிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

*  40 கோடி வருமான வரி கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

*  உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

* 2022-க்குள் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும்.

* வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* விவசாயம் தொடர்பான 3 சட்டங்களை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். 

* வேளாண்துறையை முன்னேற்ற 16 கட்டங்களாக திட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

*  பண்ணை தொழிலை தனியார் நிறுவனங்கள் நடத்தும் விதமாக மறுசீரமைப்பு செய்யப்படும். 

* உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 100 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

* சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். 

* தரிசு நிலங்கயில் சூரிய மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

* தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

* விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

* தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்

* 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.

* அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை

* மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்.

*  விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

* விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சி,  சமூக நலன்,இலக்கு ஆகிய கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios