ஃப்ராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், நீண்ட காலத்தில் சிறிய முதலீட்டை பெரிய தொகையாக மாற்றும் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும்.
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது சென்செக்ஸ் 81,000 முதல் 82,000 புள்ளிகள் வரை வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. நிஃப்டி 50 குறியீடு 24,000 முதல் 25,000 வரம்புக்குள் நகர்கிறது. இந்த வர்த்தக நிலவரம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த மியூச்சுவல் ஃபண்ட்
இந்த சந்தை நிலவரத்தில், நீண்ட காலத்தில் சிறிய முதலீட்டை பெரிய தொகையாக மாற்றும் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும் “ஃப்ராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்”. இந்த திட்டம் செப்டம்பர் 1994ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஃபண்ட் வங்கித்துறையில் 27.70%, தொலைத்தொடர்பு துறையில் 8.29%, மருந்து மற்றும் பயோடெக் துறையில் 5.11% மற்றும் உற்பத்தித் துறையில் 4.20% முதலீடு செய்துள்ளது.
நீண்ட கால முதலீடு
இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து வருடத்திற்கு சராசரியாக 18% வருமானத்தை வழங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, 1994-இல் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இன்று சுமார் ₹1.58 கோடி ஆக மாறியிருக்கும். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகுந்த லாபம் தரும் வாய்ப்பாக உள்ளது.
14 சதவீதம் வருமானம்
அதேவேளை, கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஃபண்ட் மிகச் சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த 1 ஆண்டில் 9.28%, 3 ஆண்டுகளில் 19.08%, 5 ஆண்டுகளில் 27.40%, 10 ஆண்டுகளில் 13.96%, மற்றும் 15 ஆண்டுகளில் 14.67% வரை சராசரி வருடாந்த வருமானத்தை வழங்கியுள்ளது.
அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மென்ட்
முதல் முதலீடு ₹1 லட்சம் என்ற அடிப்படையில், இந்த ஃபண்ட் 1 ஆண்டில் ₹1,09,280, 3 ஆண்டுகளில் ₹1,69,030, 5 ஆண்டுகளில் ₹3,35,790, 10 ஆண்டுகளில் ₹3,69,760 மற்றும் 15 ஆண்டுகளில் ₹7,80,540 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது இந்த ஃபண்டின் AUM (அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மென்ட்) ₹18,224 கோடியாக உள்ளது.