உங்கள் கார்- பைக் இனி என்னவாகும்..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் வாகனங்களுக்கும் 15 ஆண்டுகள் பழமையான வணிக வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையினர் நீண்ட காலமாக இந்தக் கொள்கையை எதிர்நோக்கியிருந்தனர். இந்தக் கொள்கையின் கீழ் 15 மற்றும் 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் என்பதால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும். சுற்றுக் சூழலை பாதுகாக்கும் நோக்கில், தனியார் வாகங்கள் அதிகப்படியாக 20 ஆண்டுகளுக்கும், வாடகைக்கு இயக்கப்படும் கமர்ஷியல் வாகனங்கள் அதிகப்படியாக, 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.