Gold Silver Rates: தங்கம், வெள்ளி விலை ரூ.4,000 சரிவு! நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் செய்த மாயம்!

Gold Silver Rates: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மணிநேரத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலையும் அதற்கு ஏற்ப குறைந்துள்ளன. 

Union Budget: Gold and silver prices fall by up to Rs 4000 after budget cuts customs duty to 6% sgb

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் இன்று தனது 7வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகிய உலோகங்கள் மீதான சுங்க வரியை குறைப்பதாக அறிவித்தார். இதனான் விளைவாக ஆபரணங்களின் விலை உடனடியாகக் குறைந்துள்ளது.

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சங்க வரியை 6% ஆக குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர். இது தங்க நகைகளின் விலையை சவரனுக்கு ரூ.4000 வரை குறையக்கூடும். குறிப்பாக, கள்ளச்சந்தையில் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கவும் உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு, அவற்றின் தேவையை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். நகை வியாபாரிகளின் நீண்டகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Union Budget 2024: வருமான வரியில் நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

இதனிடையே, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த சில மணிநேரத்தில்  தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2000 க்கு மேல் குறைந்துள்ளது. வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலையும் அதற்கு ஏற்ப குறைக்கப்பட்டுள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% சதவீதமாகவும், பிளாட்டினத்தின் மீது 6.4% சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகைக் கடைகளில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலை கணிசமாக சரிந்துள்ளது. நகை வாங்கத் திட்டமிட்டிருந்த மக்களுக்கு இந்த விலை குறைப்பு இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரிக்க உதவும் என்றும் பொதுமக்கள் தங்கள் சேமிப்பில் குறைந்தது 10-15 சதவீதத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மத்திய பட்ஜெட் 2024: விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios