விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’வருவாயை பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகவும் விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  வேளாண் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் அரசே கொள்முதல் செய்யும் நடைமுறை தொடரும். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லின் ஆதார விலை 2 மடங்கு உயர்த்தப்படுவதன் மூலம் விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள். கடந்த ஓராண்டில் அரசின் நெல் கொள்முதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கலில் சுகாதாரத் துறைக்கு ரூ. 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்ட நகரங்களுக்கு மெட்ரோ சேவை பெருநகரங்களை தொடர்ந்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தனது பட்ஜெட் தாக்கல் உரையில் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள். இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது'' என அவர் தெரிவித்தார்.