Budget 2022: 5G : 5 ஜி என்ற நிர்மலா சீதாராமன்.. பிஎஸ்என்எல் நிலை என்ன? கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்..!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், 5G இணையச் சேவையை வழங்கும் வகையில் அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டு நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க, அப்படியென்றால் பிஎஸ்என்எல் நிலை என்னவென்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், 5G இணையச் சேவையை வழங்கும் வகையில் அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
அப்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், அப்படியென்றால் பிஎஸ்என்எல் நிலை என்ன? அதற்கு 5ஜி அலைக்கற்றை இல்லையா என முழங்கினர். இதனால் சில விநாடிகள் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.