தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் பல திட்டங்களை அறிவித்த அவர், ‘’கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். விரைவில் 2 புதிய தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்.  நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது . மத்திய பட்ஜெட் தாக்கல்: கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!. வரும் 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், மதுரை-கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூ.27லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள். இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.  27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி. பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை’’என அவர் தெரிவித்தார்.