காசு, பணம், துட்டு: 7-வது மாதமாக லட்சம் கோடிகளில் கொட்டும் ஜிஎஸ்டி வரி வசூல்
தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தைவிட கடந்த ஜனவரியில் வருவாய் 15 சதவீதம்அதிகமாகும்
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.24 ஆயிரத்து 264 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.32 ஆயிரத்து 16 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.72 ஆயிரத்து 30 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 674 கோடி கிடைத்துள்ளது.
தொடர்ந்து 7வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிலும் தொடர்ந்து 4-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 15 சதவீதம் கூடுதலாக வரி வசூலாகியுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரியை விட 25 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர்-டிசம்பரில் சராசரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியாகும். ஆனால் முதல் காலாண்டில் மாத சராசரி ரூ.1.10லட்சம் கோடியாகவும், 2-வது காலாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகவும் இருந்தது.
கடந்த 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும், அக்டோபரில் ரூ.1.30 லட்சமும், நவம்பரில் ரூ.1.31 லட்சம் கோடியும், டிசம்பரில் ரூ.1.29 லட்சம் கோடியும வசூலாகியது.
பொருளாதார மீட்சி, வரிஏய்ப்புத் தடுப்பு, போலியாக பில் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடித்து தடுத்தல் போன்றவற்றின் மூலம் ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. வரிவிதிப்பு கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை ஜிஎஸ்டி கவுன்சில் செய்ததன்காரணமாகவும் இந்த வரி உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் இதே வரி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022,ஜனவரி 29ம் தேதிவரை ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன் 1.05 கோடிபேர் தாக்கல் செய்துள்ளனர், 35 லட்சம் பேர் காலாண்டு ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது