Budget 2022: மத்திய பட்ஜெட்.. சுகாதாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு?
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மத்திய பட்ஜெட் சுகாதாரத்துறை அதிக முக்கியத்தும் கொடுக்க வாய்ப்புள்ளது.
2022-23ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மத்திய பட்ஜெட் சுகாதாரத்துறை அதிக முக்கியத்தும் கொடுக்க வாய்ப்புள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் மத்திய அரசு சுகாதாரத்துறையின் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. இந்த கவனம், அக்கறை இந்த பட்ஜெட்டிலும் தொடரக்கூடும் எனத் தெரிகிறது. கிராமப்புறங்களில் இன்னும் மருத்துவச் சேவை எட்டப்படாமல் இருக்கிறது. வது மற்றும் 3-வது தர நகரங்களிலும் எதிர்பார்த்த நவீன மருத்துவச் சேவை கிடைக்கவில்லை. குறிப்பாக ஐசியூ வசதி, வென்டிலேட்டர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் பிளான்ட் ஆகியவை இல்லை.
இதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரலாம். நாட்டின் ஜிடிபியில் தற்போது 1.2 % மருத்துவக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்படுகிறது, இதை 3% சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மருத்துவத்துறையினர் சார்பில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் இந்தியா மருத்துவத்துறையின் மையமாகவே உலகளவில் கருதப்பட்டது. கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு, அது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆகையால், பெருந்தொற்றுக்கான மருந்துக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மருந்துகள், கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படலாம். சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக ரூ.2.23 லட்சம் கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. வரும் நிதியாண்டு பட்ஜெட்டில் இதைவிட கூடுதலாக நிதி ஒதுக்கிடலாம் என்று கூறப்படுகிறது.