Budget 2022: Online Education பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி ஊக்குவிக்க அட்டகாசமான திட்டம்..!

2022-23-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பேசி வருகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக நிர்மலா வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.

Budget 2022: Online education will be encouraged for school and college students

கொரோனா காலத்தில் கல்வியை இழந்தவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

2022-23-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பேசி வருகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக நிர்மலா வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.

* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.

* அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது 

*  மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த  திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு.

* 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.

* நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

* ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 

* பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்ய புதிய திட்டம்.

* நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios