budget2022:Income tax :தனிநபர் வருமான வரி மாற்றமில்லை..வருமான வரி தாக்கல் திருத்தம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு..

budget2022:மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் தனிநபர் வருமான வரிவிலக்கு  உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

budget 2022 live updates

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் தனிநபர் வருமான வரிவிலக்கு  உச்சவரம்பு எந்த மாற்றமின்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரி 1.40 லட்சம் கோடியாகும். 

வருமான வரி தாக்கலில் இருந்து திருத்தம் செய்ய 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள் வருமான வரி தாக்கலில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம். புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிசலுகைகள் மார்ச் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடைக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வைரம் மற்றும் ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் சார்ஜர்,கேமிரா லென்ஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவு சங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% சதவீதமாக குறைக்கப்படும். நாட்டில் எந்தவொரு பகுதிகளிலிருந்தும் பத்திரபதிவு மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவுமுறை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடியாக ஆக இருக்கும். மேலும் நாட்டின் வரவு 22.8 லட்சம் கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி பற்றாக்குறை 6.4% ஆக குறையும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிட்காயின் வருமானத்திற்கு 30% சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 5ஜி அலைகற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களும் இணையவசதி செய்துத்தரப்படும். அனைத்து கிராமங்களையும் இ சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் மூலதன செலவீனங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35.4% அதிகமாகும். 

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம்,ஊட்டச்சத்து 2.0 எனும் மூன்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2022- 23 ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய பட்ஜெட்டில், காவிரி - பெண்ணாறு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி- பெண்ணாறு- காவிரி நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்  நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைத்தால் தமிழகத்திற்கு பலனளிக்கும்.44 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios