Budget 2022 : 5G :5ஜி அலைகற்றை ஏலம்.. வீட்டிலே குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு..

நடப்பு நிதியாண்டில் 5ஜி அலைகற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களும் இணையவசதி செய்துத்தரப்படும்.

Budget 2022 Live Updates: J 5G auction announced by FM Nirmala Sitharaman

நடப்பு நிதியாண்டில் 5ஜி அலைகற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களும் இணையவசதி செய்துத்தரப்படும். அனைத்து கிராமங்களையும் இ சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் மூலதன செலவீனங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35.4% அதிகமாகும். பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களில் 68% சதவீதம் உள்நாட்டிலே கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி செய்து தரப்படும்.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்க்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம்,ஊட்டச்சத்து 2.0 எனும் மூன்று திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2022- 23 ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், காவிரி - பெண்ணாறு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி- பெண்ணாறு- காவிரி நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்  நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைத்தால் தமிழகத்திற்கு பலனளிக்கும்.

எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படும். 44 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். சிறுதொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். டிரோன் மூலம் நிலங்களை அளப்பதும், விளைச்சலை கணிப்பது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்படும். உளநாட்டிலே எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரித்து  இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடப்பு நிதியாண்டில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி 9.27% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios