Budget2022:Tax Reduction:2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. எவற்றிற்கெல்லாம் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்புகள்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

*கார்ப்பேட் நிறுவனங்களான கூடுதல் 12% சதவீதத்திலிருந்து 7% சதவீதமாக குறைப்பு.

*வைரம் மற்றும் ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% சதவீதமாக ஆக குறைப்பு

*மொபைல் சார்ஜர் மற்றும் கேமிரா லென்ஸ் உள்ளிடவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரிசலுகை அறிவிப்பு

*மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும் 

*இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

*கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும்.

*ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படும்.

*சுங்க வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். நியாயமான கட்டணங்கள் தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை. 7.5% மிதமான வரி என்ற திட்டம் இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்படுகிறது.

*இமிடேஷன் நகைகளுக்கான வரி மற்றும் முக்கியமான ரசாயனங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

*வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரத்தின் மீதான சுங்க வரி5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

*சோடியம் சயனைடு மீதான வரி உயர்த்தப்படுகிறது

*குடைகள் மீதான வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சில வகை குடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட வரியும் திரும்பப்பெறப்படும்.

*ஸ்டீல் ஸ்கிராப்களுக்கு விதிக்கப்படும் வரி மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

*துருப்பிடிக்காத எஃகு மீதான வரி குறைப்பு திரும்பப் பெறப்படுகிறது.

*இறால் மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்களுக்கான சுங்க வரி குறைப்பு