விலை 8 லட்சம் கூட இல்ல; சூப்பர் பட்ஜெட்டில் புதுசா ஒரு SUV காரை களமிறக்கிய Skoda!
Skoda Kylaq : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா நிறுவனம் தனது பட்ஜெட் செக்மென்ட் SUV காரான ஸ்கோடா கயலக் மடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
ஸ்கோடா இந்தியா தனது கைலாக் காம்பாக்ட் எஸ்யூவியை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கோடா Kylaq காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக வருகின்ற டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளதுஹ். மேலும் இந்த புதிய காரின் விற்பனை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் துவங்கும். இந்த எஸ்யூவி வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி ஷோவில் மக்களுக்கு காட்சிபடுத்தப்படவுள்ளது.
Skoda Kylaq கார் ஆனது ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் சிறிய SUV கார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த நிறுவனம் இந்தியாவில் சுமார் 1,00,000 யூனிடுகளை ஆண்டு விற்பனையில் விற்க டார்கெட் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்புக்கு, மோடி அரசால் துவங்கப்பட்ட இந்தியா 2.0 திட்டத்தில் இருந்து பிறந்த குஷாக் மற்றும் ஸ்லாவியா, 2022ல் 53,721 யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இல்ல; விடா Z இங்க தான் ஃபர்ஸ்ட் - காரணம் கேட்டா தலையே சுத்துது!
இந்த புதிய ஸ்கோடா கார், சிறியது என்றாலும் ஸ்டைலிங் என்று வரும்போது அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. ஸ்கோடா பிராண்டின் சமீபத்திய 'மாடர்ன் சாலிட்' வடிவமைப்பு கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடாவில் பொதுவாக அமைக்கப்படும் கிரில் அமைப்பைவை விட இந்த குஷாக்கில் கொஞ்சம் மெலிதானதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் அழகை கூட்டுவதற்காக பானட்டில் உள்ள கிரில் திறன்பட அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அலுமினியம்-லுக் ஸ்பாய்லர் லோயர் டவுன் சில மாறுபாடுகளை சேர்க்கிறது.
கைலாக்கின் விலை ரூ. 7.89 லட்சத்தில் தொடங்குகிறது என்பது ஸ்கோடாவிற்கு இந்திய SUV சந்தையின் முக்கிய இடத்தைப் பெற உதவுகிறது என்றே கூறலாம். இன்னும் தங்கள் நிறுவனங்கள் இல்லாத நகரங்களுக்கு ஸ்கோடா தனது வரம்பை விரிவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது. கைலாக், Tata Nexon, Mahindra XUV 3XO, Maruti Brezza, Hyundai Venue மற்றும் Kia Sonet போன்ற சில வலுவான போட்டியாளர்களுக்கு எதிராக இருக்கும்.
குறைந்த விலையில் காற்றோட்டமான இருக்கைகளுடன் வரும் SUV கார்கள்