4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற Tata Tiagoவை ரூ.2 லட்சம் தள்ளுபடியில் ரூ.4.99 லட்சத்தில் வாங்கலாம்: எப்படி தெரியுமா?
டாடா மோட்டார்ஸ் தற்போது முந்தைய தயாரிப்புகளை வெளியேற்றுவதில் மும்முரமாக உள்ளது. நிறுவனம் அதன் சிறிய கார் டியாகோ மீது நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. இந்த காரை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாங்கினால் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
Tata Tiago: டாடா மோட்டார்ஸின் சிறிய வகை கார்களில் ஒன்று டியாகோ அதன் சக்திவாய்ந்த பாடி ஸ்டெக்சருக்காக அதிகம் அறியப்படுகிறது. பாதுகாப்பில் இந்த கார் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றதற்கு இதுவே காரணம். ஆண்டு முடிய இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன. புதிய கார் வாங்குவதற்கும் இதுவே சிறந்த நேரம். தற்போது, கார் நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் பழைய கார்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏனெனில் ஜனவரி 1ம் தேதி முதல் கார்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தற்போது பழைய கார்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் நிறுவனம் அதன் சிறிய கார் டியாகோ மீது நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. செய்திகளின் அறிக்கையின் படி தற்போது டியாகோவில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விலை, அம்சங்கள் மற்றும் தள்ளுபடி
டாடா டியாகோ விலை ரூ.4.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இந்த தள்ளுபடியில் கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் அடங்கும். விரிவாகப் பேசினால், டாடா டியாகோ 2023 மாடலின் அனைத்து வகைகளிலும் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியில் ரூ.1 லட்சம் நுகர்வோர் தள்ளுபடி மற்றும் ரூ.1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ஆகியவை அடங்கும். டாடா டியாகோ 2024 இன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Tata Tiago ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கும் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. காரில் மிக நல்ல ஒலி அமைப்பு உள்ளது. இது தவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ஈபிடியுடன் கூடிய நட் லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் உள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த காரை இப்போது ரூ.4.99 லட்சத்தில் வாங்குவதில் ஒரு நன்மை இருக்கிறது.
டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்
ஆனால் நீங்கள் கொஞ்சம் காத்திருக்க முடிந்தால், டாடா டியாகோவின் ஃபேஸ்லிஃப்ட் (Tiago Facelift) மாடல் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இதில் வடிவமைப்பிலிருந்து உட்புறம் மற்றும் எஞ்சின் வரை மாற்றங்களைக் காணலாம். எஞ்சின் பற்றி பேசுகையில், புதிய டியாகோ 3 சிலிண்டர், 1.2லி பெட்ரோல் எஞ்சின் பெறும், இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
இது தவிர, இந்த காரும் சிஎன்ஜியில் கொண்டு வரப்படும். டாடா டியாகோ 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதுப்பிப்பைப் பெற்றுள்ளது. முன்னதாக ஜனவரி 2020 இல், நிறுவனம் இந்த காரை புதுப்பித்தது. இந்த புதிய மாடல் ஜனவரி மாதம் நடைபெற உள்ள இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும், இது தொடர்பாக நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.