Toyota Innova: பெட்ரோல் போடாமல் ஓடும் முதல் கார் இதுதான்! நிதின் கட்கரி அறிமுகப்படுத்தும் புதிய இன்னோவா!

100 சதவீதம் எத்தனாலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அது உலகின் முதல் பிஎஸ்-6 வாகனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Nitin Gadkari to unveil world's first 100% ethanol-fueled Toyota Innova car on August 29 sgb

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை ஆகஸ்ட் 29, செவ்வாய்க்கிழமை டொயோட்டா நிறுவனத்தின் 100% எத்தனால் எரிபொருளைக் கொண்டு இயங்கும் இன்னோவா காரை வெளியிடுகிறார். திங்கட்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

மாற்று எரிபொருளில் இயங்கும் பசுமை வாகனங்களை கொண்டுவருமாறு வாகன உற்பத்தியாளர்களை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி வருகிறார். கடந்த ஆண்டு, டொயோட்டா மிராய் என்ற ஹைட்ரஜனில் இயங்கும் காரை நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், "ஆகஸ்ட் 29ஆம் தேதி, 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்த உள்ளேன்" என்று அமைச்சர் கட்கரி கூறியுள்ளார். இது உலகின் முதல் பிஎஸ்-6 (நிலை-II), எலக்ட்ரிக் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனம் என்றும் கூறப்படுகிறது.

ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

Nitin Gadkari to unveil world's first 100% ethanol-fueled Toyota Innova car on August 29 sgb

2004ஆம் ஆண்டு முதல் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக உயிரி எரிபொருளில் ஆர்வம் காட்டத் தொடங்கியதாகவும், இதற்காக தாம் பிரேசிலுக்குச் சென்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உயிரி எரிபொருள்கள் அதிசயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்தவை என்றும் அவற்றை பயன்படுத்தினால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்ய நிறைய செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் தற்சார்புடன் இருக்க விரும்பினால், எண்ணெய் இறக்குமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவர வேண்டும். தற்போது இதற்கு ஆகும் செலவு ₹16 லட்சம் கோடியாக உள்ளது. இது பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு. நாட்டில் மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் இந்தியா இன்னும் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

"காற்று மற்றும் நீர் மாசுபாட்டை நாம் குறைக்க வேண்டும். நமது ஆறுகளில் உள்ள நீரின் தரத்தை மேம்படுத்த வேண்டும். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இது ஒரு பெரிய சவாலாகும்" என்று அமைச்சர் மேலும் கூறினார். துவாரகா விரைவுச் சாலையின் கட்டுமானத்தையும் உள்ளடக்கிய ₹65,000 கோடி மதிப்பிலான பல்வேறு சாலைத் திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

டொயோட்டாவின் புதிய ரூமியன் காருக்கு முன்பதிவு ஆரம்பம்! ரூ.10.29 லட்சம் முதல் விற்பனை

Nitin Gadkari to unveil world's first 100% ethanol-fueled Toyota Innova car on August 29 sgb

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தீங்கான தாக்கம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். அவை புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது என்றார். இயற்கை விவசாயம் நிறைய செல்வத்தை உருவாக்கி நம்மை நிலைத்தன்மையை நோக்கி நகர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“கழிவுகளை செல்வமாக மாற்றுவது பற்றி மக்களுக்குக் கற்பிக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் அமைப்பதன் மூலம் சரக்குப் போக்குவரத்து செலவுகள் 14 முதல் 16 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறையும்" எனவும் அமைச்சர் நிதின் கட்கரி எடுத்துரைத்தார்.

22 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகை! இதுதான் புருனே சுல்தான் குடியிருக்கும் உலகின் மிகப்பெரிய வீடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios