Lexus LM 350h: டொயோட்டா வெல்ஃபயர் ஸ்டைலில் லெக்ஸஸ் நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார்!
லெக்ஸஸ் எல்எம் 350எச் இப்போது இந்தியாவில் அந்நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த எம்பிவியாகவும் உள்ளது. ரூ.1.2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயரை அடிப்படையாகக் கொண்டு Lexus LM 350h வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போன்ற எஞ்சினைக் கொண்டிருக்கிறது.
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான லெக்ஸஸ் இறுதியாக லெக்ஸஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) சொகுசு எம்.பி.வி. (MPV) காரை அறிமுகப்படுத்தியுள்ளது. LM 350h நான்கு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட இரண்டு மாடல்களாக வெளியாகியுள்ளது. இவை முறையே ரூ.2 கோடி மற்றும் 2.50 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும்.
லெக்ஸஸ் எல்எம் 350எச் இப்போது இந்தியாவில் அந்நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த எம்பிவியாகவும் உள்ளது. ரூ.1.2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயரை அடிப்படையாகக் கொண்டு Lexus LM 350h வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போன்ற எஞ்சினைக் கொண்டிருக்கிறது.
சொகுசு MPV ஆனது GA-K மாடுலர் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2.5-லிட்டர், 4-சிலிண்டர் வலுவான ஹைப்ரிட் எஞ்சின் மூலம் 250hp மற்றும் 239Nm கொண்டிருக்கிறது. eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார மோட்டார் ஒரு நிக்கல்-மெட்டல் ஹைட்ரைடு பேட்டரி இருக்கிறது. 19 kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது.
மாருதி சுசுகி நெக்ஸா மாடலுக்கு ரூ.80,000 பல்க் டிஸ்கவுண்ட்! பலேனோ, ஜிம்னி கார்களுக்கு செம டீல்!
வடிவமைப்பைப் பொறுத்தவரை, LM ஆனது நேர்த்தியான LED ஹெட்லேம்ப்களுடன் கூடிய பெரிய ஸ்பிண்டில் கிரில்லைக் கொண்டுள்ளது. பெரிய விண்ட்ஸ்கிரீனையும் பெறுகிறது. முழு அகல LED டெயில் லைட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் உள்புறத்தில் வசதியான ஆர்ம்ரெஸ்ட்கள், USB போர்ட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், வாசிப்புக்கு வசதியான விளக்குகள், வேனிட்டி கண்ணாடிகள், சிறிய குளிர்சாதனப்பெட்டி, இரட்டை சன்ரூஃப், 23-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 48-இன்ச் டிஸ்ப்ளே என்று பல கவர்ச்சிகரமான வசதிகள் இருக்கின்றன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது டிஜிட்டல் ரியர்வியூ மிரர், 360 டிகிரி கேமரா, பல ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் சிஸ்டம்+ 3 சூட் ADAS தொழில்நுட்பம், டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் உதவியுடன் லேன் அலர்ட் ஆகிய வசதிகள் அடங்கும். லேன் டிரேசிங் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.
ஸ்பின்கிரிடிபிள் அஸ்வினுக்குப் பாராட்டு! ஒரு கோடி ரூபாய் செக்... 500 தங்கக்காசு... 100 வெள்ளிக்காசு!