ரூ.6 லட்சம் பல்க் டிஸ்கவுண்ட்! குயின் எலிசபெத் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் காரை இப்ப நீங்களும் வாங்கலாம்!
ரேஞ்ச் ரோவர் வெலார் எஸ்யூவி இப்போது வேலார் ஃபேஸ்லிஃப்ட் ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எஸ்யூவியாக இருக்கிறது.
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தி வந்த கார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் கார். புகழ்பெற்ற இந்த காரின் விலை இப்போது இந்தியாவில் இதுவரை இல்லாத சலுகை விலையில் கிடைக்கிறது.
லேண்ட் ரோவர் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் வெலார் எஸ்யூவி காரை ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.93 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. டிசம்பரில் இதன் விலை ரூ.1.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. இப்போது இதன் விலையை ரூ.6.4 லட்சம் குறைத்திருக்கிறார்கள்.
இதனால் ரேஞ்ச் ரோவர் வெலார் எஸ்யூவிக்கான விலை இப்போது ரூ.87.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. ரேஞ்ச் ரோவர் வெலார், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் அல்லது சிங்கிள் HSE வேரியண்டில் கிடைக்கிறது.
இது வேலார் ஃபேஸ்லிஃப்ட் ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எஸ்யூவியாக இருக்கிறது. ரேஞ்ச் ரோவர் ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்து வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய மாற்றங்களைப் பெற்றுள்ளது.
ரேஞ்ச் ரோவர் வெலார் எஸ்யூவியில் வடிவமைப்பைப் பொறுத்தவரை, நேர்த்தியான பிக்சல் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டைனமிக் வளைவு விளக்குகளைக் கொண்டிருக்கிறது. காரின் முகப்பில் கருப்பு தீம் கொண்ட கிரில் உள்ளது.
பின்புறத்தில், மாற்றங்கள் நுட்பமானவை. இது புதிய ஸ்கஃப் பிளேட்டுடன் பம்பர் மறுவடிவமைப்பைப் பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதியும் அப்படியே இருக்கிறது. புதிய வெலார் எஸ்யூவி நீலம் மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.
உட்புறத்தில் 11.4-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. புதிய 'ப்ரீ-டிரைவ்' பேனல் மற்றும் அமேசான் அலெக்சா, ஸ்டீயரிங் வீல், ஏர் வென்ட்கள் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவையும் உள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் வசதியும் இருக்கிறது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் இதன் முக்கியமான அம்சங்கள்.
கூகுள் குரோம் பயனர்கள் உஷாரா இருக்கணும்! மத்திய அரசின் எச்சரிக்கையின் என்ன சொல்றாங்க?