ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பாக்ட் SUV-க்கு HX5+ என்ற புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் விலையில், இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.
ஹூண்டாய் தனது பிரபலமான காம்பாக்ட் SUV மாடலான Hyundai Venue-க்கு புதிய வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது இந்த புதிய மாடல், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அம்சங்கள் மற்றும் வசதிகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பரில் 2026 இடம் மாடலை அறிமுகம் செய்த ஹூண்டாய், அதனைத் தொடர்ந்து தற்போது வேரியண்ட் பட்டியலை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய வேரியண்ட் HX5+ என பெயரிடப்பட்டுள்ளது. இது HX5 மற்றும் HX6 வேரியண்டுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த HX5+ வேரியண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9,99,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, காம்பாக்ட் SUV பிரிவில் ஹூண்டாய் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதைக் காட்டுகிறது.
எஞ்சின் தேர்வுகளைப் பார்க்கும்போது, HX5+ வேரியண்ட் ஒரே ஒரு பவர்டிரெயின் ஆப்ஷனுடன் மட்டுமே வருகிறது. இதில் கப்பா 1.2 லிட்டர் நெச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 82 bhp பவர் மற்றும் 115 Nm டார்க் வழங்குகிறது. இதனுடன் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிக எஞ்சின் ஆப்ஷன்கள் HX5 வேரியண்டில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகள் உள்ளன.
அம்சங்களைப் பொருத்தவரை, HX5+ வேரியண்ட் HX5-ஐ விட கூடுதல் வசதிகளை வழங்குகிறது. இதில் ரூஃப் ரெயில்கள், குவாட் பீம் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் விண்டோ சன் ஷேட்கள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், முன்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட் (ஸ்டோரேஜ்), ரியர் வாஷர் & வைப்பர், டிரைவர் விண்டோ ஆட்டோ அப்/டவுன் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதே சமயம், HX4 வேரியண்டிலும் சிறிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட்மெண்ட் அம்சம் தற்போது வழங்கப்படுகிறது.


