நாங்களும் களத்தில் இறங்குறோம்; ஸ்டைலிஷ் லுக்கில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - வேலையை துவங்கிய ஹோண்டா!

Honda E Scooters : பிரபல ஹோண்டா நிறுவனம் எதிர்வரும் 2025ம் ஆண்டு தனது முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.

honda may launch new ev scooter in market by 2025 ans

இந்த 2024ம் ஆண்டுக்கான EICMA 2024 வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ஷோவில் இந்தியாவின் முன்னணி பிராண்ட் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வண்டிகளை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு EICMAல், பிரபல ஹோண்டா நிறுவனம் பல மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டும் ஹோண்டா நிறுவனம் தனது புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்த கண்காட்சியில் பலவிதமான மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் கான்செப்ட்களை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் ஒரு இ-ஸ்கூட்டர் விரைவில் உற்பத்திக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்த நிலையில், ஹோண்டா தனது இரண்டாவது EV ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே வெளியான CUV e-ஐ பவர் செய்வது: இரண்டு நீக்கக்கூடிய பேட்டரி பேக்குகள் மற்றும் ஹோண்டா ஒரு முறை சார்ஜ் செய்தால் ‘70 கிமீக்கு மேல்’ செல்லும் என்று கூறுகிறது. இந்த மாடலை முன்னோட்டமிடும் கான்செப்ட் கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவிலும் காட்டப்பட்டது. CUV-e உடன் இரண்டு டிஸ்ப்ளேக்களை ஹோண்டா இந்த பைக்குகளில் வழங்குகிறது: புளூடூத் இணைப்புடன் 5-இன்ச் ஒன்று அல்லது 7-இன்ச் TFT டிஸ்ப்ளேயுடன் இவை வரும். மேலும் CUV e: ரிவர்ஸ் ஃபங்ஷனுடன் 3 சவாரி மோட்களில் கிடைக்கும்.

புதிய மாருதி சுசுகி டிசையர் இன்னும் வரவே இல்லை.. அதுக்கு முன்னாடியே லீக் ஆயிடுச்சே

EV FUN கான்செப்ட் என்பது ஹோண்டாவின் ஸ்போர்ட்டி எலக்ட்ரிக் நேக்கட் பைக்கின் முயற்சியாகும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது, "இது நடுத்தர அளவிலான உள் எரிப்பு திறன் கொண்ட இயந்திரம் (ICE) மோட்டார் சைக்கிளுக்கு சமமான செயல்திறனை வழங்குகிறது மற்றும் 2025ல் வணிகமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று ஹோண்டா கூறியுள்ளது. EV ஃபன் கான்செப்ட் இன்னும் கான்செப்ட் நிலையில் உள்ளது என்றாலும், இறுதி செய்யப்பட்ட பிரேக்குகள் மற்றும் சஸ்பென்ஷன் இருப்பது, அது வளர்ச்சியின் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறது.

EV FUN கான்செப்ட்டின் பேட்டரி CCS2 விரைவு சார்ஜருடன் வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. (கார்களில் காணப்படும் அதே சார்ஜர்), இது அதிக சார்ஜிங் விருப்பங்களைத் திறக்கும். இது 100 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண வரம்பையும் வழங்கும் என்று ஹோண்டா கூறுகிறது.

1 ரூபாய் செலவில் உங்கள் காரை சுத்தம் செய்யலாம்.. சூப்பர் டிப்ஸ் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios