போதிய வரவேற்பை பெறமால் இந்திய சந்தையில் இருந்தே காணாமல் போன 7 பைக்குகள்.. லிஸ்ட் இதோ..

இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் தோல்வியடைந்த 7 பைக்குகளைப் பற்றிப் இந்த பதிவில் பார்க்கலாம்.

7 bikes that disappeared from the Indian market due to insufficient reception.. Here is the list..

ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய பைக்குகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றில் சில பைக்குகள் விற்பனையில் வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் ஒரு சில பைக்குகள், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றன. எனவே இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் தோல்வியடைந்த 7 பைக்குகளைப் பற்றிப் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பைக்குகள் வித்தியாசமான விளம்பர யுக்தியுடன் இந்த பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சில நாட்களிலேயே சந்தையில் இருந்து காணாமல் பைக்குகளும் இருக்க தான் செய்கின்றன.

1. சுசுகி இன்ட்ரூடர் 150

சுஸுகி நிறுவனம் 150சிசி திறன் கொண்ட உலகப் புகழ்பெற்ற இன்ட்ரூடர் 1800 பைக்கை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது. இந்த பைக், 5 வருடம் சந்தையில் தாக்குப்பிடித்த நிலையில், ஒருக்கட்டத்தில் விற்பனை மந்தமானது. இதன் காரணமாக நிறுவனம் 2017-ல் இந்த பைக்கின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியது.

பைக் வாங்க போறீங்களா.? கம்மி விலையில் டாப் 5 பட்ஜெட் பைக்ஸ் இதுதான்..!

2. மஹிந்திரா மோஜோ

அதிக திறன் கொண்ட மஹிந்திராவின் முதல் ஸ்போர்ட்ஸ் லுக் பைக் இதுவாகும். 295சிசி இன்ஜின், 26.8எச்பி பவர், 30என்எம் டார்க் போன்ற பல திறமையான அம்சங்கள் இருந்தும் கூட, சந்தையில் நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை. 2020 ஆம் ஆண்டில், நிறுவனம் ஏபிஎஸ் பிரேக்கிங் கொண்ட இந்த பைக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த பைக்கும் விற்பனையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

3. ஹோண்டா நேவி

உலக சந்தையில் வெற்றி பெற்ற இந்த குட்டி பைக் இந்திய மக்களை கவரும் என்று ஹோண்டா நிறுவனம் கருதியது. இருப்பினும், குறைந்த விற்பனை காரணமாக, நிறுவனம் 2020 இல் இந்த பைக்கின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

4. ஹீரோ இம்பல்ஸ்

2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆஃப்-ரோடு ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியர்களை அதிகம் ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 2016ல் இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்திய நிறுவனம், எக்ஸ்பல்ஸ் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தி தற்போது சந்தையில் போட்டியை சமாளித்து வருகிறது.

5. ஹோண்டா கிளிக்

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக், பைக் பிரியர்களையும் ஈர்க்கவில்லை. 2020-21 ஆம் ஆண்டில், 7 மாதங்களில் ஒரு வாகனம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020ல் இந்த பைக்கின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்தியது.

6. சுசுகி இனாசுமா 250

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், பல வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் சரியாக விற்பனையாகவில்லை. 248சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின், 6 கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆனால், சில காரணங்களால் பைக் பிரியர்கள் இந்த பைக்கை விரும்பவில்லை.

7. எல்எம்எல் ஃப்ரீடம்

2002 இல் 110சிசி எல்எம்எல் ஃப்ரீடம் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் குறைந்த திறன் மற்றும் மந்தமான விற்பனை காரணமாக 2018-ல் அந்த நிறுவனமே திவாலானது.

 

புதிய கார் வாங்க போறீங்களா.? இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios