2025 மாருதி சுசுகி ஸ்விஃப்ட், புதிய ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய மாடல், Z-சீரிஸ் இன்ஜின் மூலம் பெட்ரோல் மற்றும் CNG வகைகளில் சிறந்த மைலேஜை வழங்குகிறது.
பல வருடங்களாக இந்திய சந்தையில் தனது ஸ்போர்ட்டி தோற்றத்தால் மற்றும் எரிபொருள் திறனாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், 2025 மாடலுடன் புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் வெளிவந்துள்ளது. தினசரி பயணங்களுக்கும், நகர மற்றும் நெடுஞ்சாலை ஓட்டங்களுக்கும் ஏற்ற வகையில் இது உள்ளது.
வடிவமைப்பு
2025 ஸ்விஃப்ட் முந்தைய மாடலைவிட சற்று நீளமானதாகவும், ஸ்போர்ட்டியாகவும் காட்சியளிக்கிறது. நீளம் 3860 மிமீ, அகலம் 1735 மிமீ, உயரம் 1520 மிமீ மற்றும் வீல்பேஸ் 2450 மிமீ ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 163 மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 265 லிட்டர் உள்ளது. எரிபொருள் டேங்க் 37 லிட்டர் கொள்ளளவாக அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
2025 ஸ்விஃப்ட் காரில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. உயர் வேரியன்டுகளில் ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஸ்பீட் அலெர்ட் போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளன.
இன்ஜின் விருப்பங்கள்
2025 ஸ்விஃப்ட் LXi, VXi, VXi(O), ZXi மற்றும் ZXi+ என ஐந்து வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களுடன் வருகிறது. புதிய 1.2-லிட்டர், 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 5,700 rpm-l 80 bhp சக்தி மற்றும் 4,300 rpm-l 111.7 Nm டார்க்கை வழங்குகிறது.
மைலேஜ் திறன்
மேனுவல் மாடல் 24.8 கிமீ/லிட்டர் மைலேஜ் வழங்குகிறது, AMT ஆட்டோமேட்டிக் மாடல் 25.75 கிமீ/லிட்டர் திறனை தருகிறது. CNG வேரியன்ட் 70 bhp சக்தி மற்றும் 32.85 கிமீ/கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது, இதன் மூலம் அதிக எரிபொருள் திறன் தேடும் பயனர்களுக்கு சிறந்த தேர்வு ஆகிறது.
தொழில்நுட்பம் வசதிகள்
உட்புறம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டாப்-ஸ்பெக் வேரியன்டில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் உள்ளது, மிட்-ஸ்பெக் வேரியன்டில் 7 அங்குல திரை உள்ளது.
வெளிப்புற அம்சங்கள்
2025 ஸ்விஃப்ட் இப்போது எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் DRL களை கொண்டுள்ளது. உயர் டிரிம்களில் 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த காரை அதன் பிரிவில் முன்னணி வாகனமாக்குகின்றன.
