2023 BMW X1: செம அப்டேட்ஸ்! வெளியானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு கார் - விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 (BMW X1) புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்,நியூ ஜெனரேஷன் எக்ஸ்1 (X1) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 மாடலுக்கான பெட்ரோல் எஞ்சினுக்கான ஆரம்ப விலை ரூ.45.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என இன்று அறிவித்துள்ளது. அதேபோல BMW X1 டீசல் ரூ. 47.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் BMW X1 ஐ ஆரம்ப வைப்புத்தொகையாக 50,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரின் டீசல் மாடல் டெலிவரி மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும், மேலும் பெட்ரோல் மாடல் ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
புதிய X1 இதற்கு முந்தைய மாடல்களை விட பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 53 மிமீ நீளம், 24 மிமீ அகலம் மற்றும் 44 மிமீ , 22 மிமீ நீளமான வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது. உட்புறத்தில் மட்டுமல்லாமல், வெளிப்புறத்திலும் மாற்றப்படுகிறது.
முன்புறம் அகலமான கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மெல்லிய ஹெட்லைட்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்-வடிவ LED DRLகள், புதுப்பிக்கப்பட்ட LED டெயில் லேம்ப்கள், ஃப்ளஷ் வகை கதவு கைப்பிடிகள், 18-இன்ச் அலாய் வீல்கள் போன்ற அம்சங்களுடன் வெளிப்புறம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ X1 இன் இன்டீரியர் டேஷ்போர்டிற்கு மேலே வளைந்த இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் (தற்போதைய BMW போன்றவை) போன்ற புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் மூன்று - சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் சக்தியை வழங்குகிறது. இது 136 குதிரைத்திறன் மற்றும் 230 என்எம் ஆகியவற்றை கொண்டதாக உருவாக்கி உள்ளார்கள்.
2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் 150 ஹெச்பி மற்றும் 360 என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. ஏழு-வேக இரட்டை-கிளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் இரண்டு சக்தி மூலங்களையும் இணைத்து அனைத்து சக்தியையும் முன் சக்கரங்களுக்கு அனுப்புகிறது. பெட்ரோல் மாடல் 9.2 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் என்றும், டீசல் பதிப்பு 0.3 வினாடிகள் வேகமானது என்றும் கூறப்படுகிறது.
பெட்ரோல் மாடலின் எரிபொருள் திறன் லிட்டருக்கு 15.03 கிமீ ஆகும், டீசல் மாடல் 19.23 கிமீ/லி அடையும். அனைத்து டிஜிட்டல் கேஜ் கிளஸ்டர், 12-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?