சனிக்கிழமையில் இரும்பு பொருட்கள், எண்ணெய், உப்பு, செருப்பு போன்றவற்றை வாங்கக் கூடாது. சனிக்கிழமையில் இரும்பு பொருட்களை தானம் செய்வது நல்லது. சனிக்கிழமையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

சாஸ்திரம் சொல்லும் செய்தி

தமிழ் சாஸ்திர முறைபடி ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விஷயத்தை செய்வது நலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் எந்த கிழமைகளில் எந்த காரியத்தை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதையும் ஜோதிடங்கள் தெரிவித்துள்ளன. ஜோதிடம் ஜாதகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதனை கடைபிடித்தும் வருகிறார்கள். அப்படி சனிக்கிழமையன்று இதனை செய்தால் நல்லது என்றும், இதனை செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் ஜோதிட நூல்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தையும் நன்மையையும் தருவதாக அமையும் என்பது நம்பிக்கை. அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது அதனை பலன் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த பொருட்களை வாங்காதீர்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

இரும்பு பொருட்கள்

நீதிமான் சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம்.

எண்ணெய் பொருட்கள்

சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்த நாள் அல்ல.அதுபோலவே வீட்டை சுத்தம் செய்யக் கூடிய பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது

உப்பு

உப்பை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு. சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பீர்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைப்பது நல்லது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். இதனால் வெள்ளி கிழமையில் மட்டுமே வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.

காலணிகள்

சனிக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்கு செருப்புகளை தானம் செய்வதன் மூலம் சனி தோஷங்கள் நீங்கும் என்கிறது ஜோதிடம், ஆனால் இந்த நாளில் காலணிகள் மற்றும் செருப்புகளை பரிசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த நாளில் ஆதரவற்றவர்கள், ஏழைகள் அல்லது முதியவர்கள் யாரையும் அவமதிக்கக்கூடாது .

பயணம்

சாஸ்திரங்களின்படி, சனிக்கிழமையன்று கிழக்கு அல்லது வடக்கு திசையில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மிகவும் அவசியமானால், இந்த திசைகளில் மட்டுமே பயணம் செய்யுங்கள், இல்லையெனில் அதைத் தவிர்க்கவும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமையன்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஆனால் இதற்காக இந்த நாளில் தவறுதலாகக் கூட கடுகு எண்ணெய் வாங்கக் கூடாது. அதற்கு பதிலாக, வீட்டில் ஏற்கனவே வைத்திருக்கும் கடுகு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.எந்த விஷயத்தையும் நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல் அதில் மறைந்திருக்கும் உண்மையை தெரிந்து கொண்டு கடைபிடிப்பது அதிக பலன்களையும் நிம்மதியையும் கொடுக்கும்.