ஜோதிடத்தின் படி, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து எந்த கடவுளின் குணம் உங்களுக்கு இருக்கிறது என்று இங்கு பார்க்கலாம்.

ஜோதிடத்தின்படி, ஒருவர் பிறந்த நாள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பிறந்த மாதமும் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகத்தை குறிப்பிடுகிறது. அதுபோல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுடன் தொடர்புடையதாக ஜோதிடம் சொல்லுகிறது. அந்தவகையில், ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவருக்கு எந்த கடவுளின் குணம் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிறந்த மாதமும், கடவுளின் குணமும்..

1. ஜனவரி :

ஜோதிடத்தின் படி ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் விநாயகர் போல இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது புத்தி கூர்மை மற்றும் தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

2. பிப்ரவரி :

ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் குபேரரின் சாயலை கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் ஏராளமான பணம், வைரம் வைடூரியத்தை வைத்துக்கொண்டு ஏழை வேஷம் போடுவார்கள்.

3. மார்ச் :

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முருகனைப் போல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். முருகனை போல இந்த மாதத்தில் பிறந்தவர்களின் ரத்தத்தில் வேகம் மற்றும் கருணை கலந்திருக்கும்.

4. ஏப்ரல் :

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நாரதர் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். நாதரை போல இவர்களும் எப்போதுமே தங்களை சுற்றி உள்ளவர்களுக்கு துன்பத்தை கொடுப்பார்கள்.

5. மே :

ஜோதிடத்தின் படி, மே மாதத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியே அம்சம் கொண்டவர்கள். இவர்கள் எங்கு இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் பரப்பிக் கொண்டே இருப்பார்களாம். இவர்களை சுற்றி இருப்பவர்கள் கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இவர்கள் வைத்திருப்பார்கள்.

6. ஜூன் :

ஜோதிடத்தின்படி, ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் எங்கு இருந்தாலும் அங்கு சொர்க்கம் தான். செல்வம் இவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். செல்வத்தின் மறு அடையாளமே இவர்கள்தான்.

7. ஜூலை :

ஜோதிடத்தின் படி, ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் சூரிய தேவன் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்களாம். ஆகவே, இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அழகின் சொரூபமாக இவர்கள் இருப்பார்கள். இதனால் எல்லாராலும் இவர்கள் கவரப்படுவார்கள்.

8. ஆகஸ்ட் :

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் துர்க்கையின் குணம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு பயமே இருக்காது. எதையும் துணிந்து செய்வார்கள்.

9. செப்டம்பர் :

செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் அனுமானின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மன வலிமை, உடல் வலிமை, நேர்மை உள்ளவர்களாக இருப்பார்களாம். இவர்களை விரைவில் யாரும் ஏமாற்றி விட முடியாது.

10. அக்டோபர் :

அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கு கிருஷ்ணனின் குணம் இருக்கும் என்கிறது ஜோதிடம். அதனாலே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு காதலிலே அதிகமாகவே இருக்குமாம். ஆனால் இவர்கள் மனதளவில் தூய்மையான அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்.

11. நவம்பர் :

ஜோதிடத்தின் படி நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு கும்பகர்ணனின் குணம் இருக்குமாம். இதனால் இவர்கள் அமைதி, தனிமை மற்றும் கடும் துக்கத்தை அதிகமாக விரும்புவார்களாம். ஆனால் எந்த ஒரு விஷயத்தை செய்ய நினைத்தாலோ அதை செய்து முடித்து விடுவார்கள்.

12. டிசம்பர்

ஜோதிடத்தின் படி, டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு சரஸ்வதியின் குணம் இருக்கும். இதனாலே இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்களாம். இவர்கள் எந்த துறையில் சென்றாலும் இவர்களுக்கு தான் முன்னுரிமை முதலில் கிடைக்கும்.