ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசிக்கான இந்த வார ராசிப் பலன்கள்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்துணர்ச்சியும், புதிய உத்வேகத்தையும் தரும். கடந்த சில நாட்களாக காத்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும், பயணம் செய்வதற்கும் நல்ல நேரம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சுப காரியங்கள் நடக்கும். சுப செலவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை நோக்கிச் செல்லும். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் இது பொன்னான நேரம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சம்பள உயர்வு, போனஸ் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலைகளில் ஏற்படும் மாற்றும் காரணமாக நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். சேமிப்பை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் உருவாகும். வீடு, வாகனம் போன்ற பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய உகந்த நேரம். நிதி மேலாண்மையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
குடும்பம் மற்றும் உறவுகள்
குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் நிலவும். பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். அவர்களின் ஆதரவு வந்து சேரும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல செய்திகள் வந்து சேரும். குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்த நேர்மறை முடிவுகள் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் வாய்ப்புகளை பொறுத்தவரை புதிய காதல் உறவு மலரும் வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் சுகமாக முடிந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும். துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் இருந்த இறுக்கங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சீரான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. எந்த வித பெரிய உடல் நலக் கோளாறுகளும் இந்த வாரம் ஏற்படாது. மாணவர்களுக்கும் இந்த வாரம் ஒரு பொன்னான வாரமாக அமையும். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். கடினமான பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாட்டு கல்விகளுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.
செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் பரிகாரம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் புதன்கிழமைகளில் விநாயகரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பச்சை நிறப் பொருட்களை பயன்படுத்துவது, பச்சை நிற ஆடைகளை அணிவது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, தானியங்கள் இடுவது நல்லது. இது உங்களின் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க உதவும். இந்த வாரம் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய வாழ்த்துக்கள்.
